பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஜமீன்தார் நீர்தானே?' என்று அவன் நேரே கேட்டான். இவர் ஆம் என் மூர். என்னவே இம் மன்னனை கோ க்கிப் பலபல அவன் பன்னலானன். அவன் சொன்னவற்றிற்கெல்லாம் நன்னயமாக இவர் நன்கு பதில் சொன்னர். இருவரும் அன்று சொல்லாடிய முறைகள் மல்லாடியபடியாய் மருவி நின்றன.அடியில் பார்க்க. ஜாக்சன்:- உம்மீது புகாம்கள் LJal) வந்திருக்கின்றன; பிழைகள் மிகப் பெருகி யுள்ளன. காம் உமக்கு முன்னம் எழுதியுள்ள கடிதங்கள் எல்லாம் கிடைத்தனவா?

மன்னன்:- எல்லாம் கிடைக்கன.

ஜாக்சன்- அந்த எழுத்துகளுக்கு உடனே நீர் ஏன் சரியாகப் பதில் செய்யவில்லை.

மன்னன்:-சிலவற்றிற்குச் செய்துள்ளேன்; சில செய்ய வேண்டாதன. விலக்கி விட நேர்ந்தன.

ஜாக்சன்:- ஆத்தார், ஆறுமுகமங்கலம் என்னும் அயன் கிராமங்கள் இரண்டையும் நீர் அடமாகக் கவர்ந்துகொண்டு உமது பாளையத்தில் சேர்த்திருக்கிறீர்! பாசனத்தைத் தடுத்திருக்கிறீர்! அதற்குக் காரணம் என்ன?

மன்னன்:- அவை என் எல்லேயில் உள்ளன, நல்ல நெல் விளைவுக்கு உரியன; பழமையாய்ப் பதிந்தன; ஆதலால் உவந்து

உரிமையோடு அவற்றைப் பாதுகாத்து வருகின்றேன்.

ஜாக்சன்:- எங்களுக்கு உரிமையான காடுகளில் புகுந்து குடிகளை வருக்தி வரிகளை வசூலிக்கின் மீர் கொடுமைகள் செய் கின்றீர்! எங்கும் தன்னாசாக இறுமாந்து நிற்கின்றீர் கும்பினி ஆட்சியை இகழ்ந்து வம்புகள் பல புரிந்து வசைமொழிகளாடி வருகின் மீர் இப் படுதொழில்கள் கெடுகுறிகள் அல்லவா?

மன்னன்:- குடிகளுக்கு யாண்டும் நாங்கள் இடறுகள் செய்யோம்; இதங்களே செய்வோம்; எங்கள் திசைகாவலுக்கு உரிமையான தொகைகளையே எங்கும் இசைவாக வசூலித்து வருகின்ருேம்; கசையாக எதையும் நயந்து கொள்ளோம்; யாரையும் இகழோம்; எங்களை இகழ்ந்து கிம்பாரை வேரோடு