பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.

வலியோடு வாள்வலியிலும் சிறந்த இவரது ஆள்வலியை நோக்கி யாவரும் அஞ்சினர். மல்வகை முதலிய பல்வகை யினத்திலும் வல்லுகரைத் தொகுத்து எல்லையில் திறல்களை இனிதுபயிற்றி எவ் வகை நிலைகளிலும் வெல் வலியுடன் இவர் விளங்கி யிருந்தார்.

ப ைட |கி லே .

தம் சாதி வீரர்கள் 6000; மறவர் 5000; பரிவாரம் 3000; பட்டாணிகள், கவுண்டர், கவரையர் வலேயர் முதலிய பலவகை மரபுகளிலும் திரண்டது 2000; ஆகப் பதினுயிரம் போர்வீரர்கள் இக்க அதிபதியிடம் ஆதரவு கூர்ந்து அமர்ந்திருந்தனர்.

o படைக்கலன்களின் அளவு.

வாள்கள் 6000, வேல்கள் 6000, வல்லயங்கள் 6000, கம்பு கள் 6000, வில்லுகள் 500, கவண்கள் 300, வெடிகள்200 வளை தடி,பரசு பிண்டிபாலம் முதலியபலவகை ஆயுதங்களும் 1000ஆக இருபத்தாருயிரம் படைக்கலன்கள் இக் கொடைக் குரிசிலின் நிலை துலக்கி நெடி யதிறல்களோடுஆயுதசாலையில் மேவியிருந்தன.

வா. க ன ங் க ள்.

குதிரைகள் 120, யானைகள் 4, ஒட்டகங்கள் 2, பெட்டி வண்டிகள் 24, சிறந்த காளைமாடுகள் 250, போர் மூட்டிப் பொழுது போக்குவதற்கு விர்நிலையில் விளங்கியிருந்த செம் மறிக் கிடாய்கள் 60, வேட்டைநாய்கள் 80 கோட்டையுள் ஈட்

டமுற்றிருந்தன. அவையாவும் காட்டமுடன் பேணப்ப்ெற்றன.

  • பட்டத்துக் குதி ரை.

- குதிரைக் கூட்டத்தில் உயர்ந்த கிலேயுடையனவாய ஐந்து குதிரைகள் மிகவும் சிறந்து நின்றன. பட்டத்துக் குதிரைக்கு முத்துராமு என்று பெயர். அது அழகில் சிறந்தது; வெண்மை நிறமுடையது; அறிவு, வேகம், ஆற்றல், தோற்றம், கம்பீரம் முக்லிய ஏற்றங்கள் யாவும் எய்தப்பெற்றது. பரியின் இலக்க ண்ங்களெல்லாம் பரிபூரணமாக அதனிடம் இனிகமைந்திருந்தன.