பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு. 65

இம் மன்னனைத் தவிர அதன் மீது வேறு யாரும் ஏறுவதில்லை. அகன அடுத்து பாலராமு, கோதண்டராமு, நீலவேனி, பஞ்ச கல்யாணி என நான்கு குதிரைகள் கன்கமைந்திருந்தன. காட்டியம் முதலியவற்றில் சிறந்த வேறு சில பரிகளும் விறு கொண்டு கின்றன. இங்கனம் படை முதலிய பலங்கள் கலமுற அமைந்து பலவகையிலும் சிறந்து தலைமையுற்று நின்று. இக் குலமகனர் நாட்டை நன்கு பரிபாலித்து எங்கும் இசைகாட்டி வந்தார். இவரது பிறப்பும் இருப்பும் பயிற்சியும் முயற்சியும் ஆட்சி முறையும் அரிய பல சீர்மைகளோடு மருவியிருக்கன.

உ ரு வ |கி லே.

இவர் சிவக்க மேனியர்; வட்டமான ஒளியமைந்த அழகிய முகத்தினர் படர்ந்த நெற்றியினர்; அடர்ந்த புருவத்தினர்; கரிய பெரிய கண்ணினர்; இருண்டு அடர்ந்து சுருண்டு நெரிந்த குஞ்சியர் சொருகு கொண்டையர்; திரண்டு உருண்ட திண் ணிய தோளினர்; அகன்று விரிந்து பரந்து நிமிர்ந்து கிவந்து விளங்கிய மார்பினர்; நீண்ட கையினர்; செறிந்து மேல்நோக்கி அரும்பியடர்ந்த மீசையினர்; கதுப்பின் இருபுறமும் கனிந்து வார்ந்த கிருதாக்களை யுடையவர்; ஏறுபோன்ற விறுகொள் கடையினர்; மருவிய எதிலும் பெருமித நிலையினர்; அருக்திறலி னர்; பெருங் கொடையினர். உருவும், திருவும், அறிவும், ஆண் மையும், இயலும், செயலும், உயர்நலம் பிறவும் ஒருங்கே யுடையராப் உயர்ந்திருந்த இவர் சிறந்த முறையில் எதனையும் தெளிந்து ஆராய்ந்து குடிகளை உரிமையோடு உவந்து பேணி வந்தார். நாடும் நகரமும் கலம்பலபெற்று வளம்படிந்து வந்தன.

அழகும் வீரமும் விழுமிய நிலையில் இவரிடம் கெழுமி யிருக்கமையை வியந்து உலகம் புகழ்ந்து வந்தது. உருவ அமைதி நேரே கண்டவர் கண்களுக்குக் களிப்பை பூட்டியது; வீரத் திறல் வெளியே கேட்டவர் நெஞ்சங்களில் கிளர்ச்சியை நீட்டியது. பிரியமான நீர்மைகள் அரிய சீர்மைகளை வளர்த்துப் பெரிய மேன்மைகளைவிளைத்து உரியமகிமைகளுடன்ஓங்கிவந்தன.

9