பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வீரபாண்டியக் கட்டபொம்மு 67

விரபாண்டியனுடைய நிலைமைகளை இக் கவிகளால் ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். பாசுரங்களில் பதிந்துள்ள பான்மை களே மானச நோக்கால் மருவிக் காண்பவர் அரிய பல காட்சி களை அறிந்து கொள்ளுவர். இவ் விரனுடைய சீவிய நீர்மைகள் யாவரும் புகழ்ந்து பாண்டும் வியந்து நோக்கத் தக்கன.

வாழ்க்கைத் துணை. உரிய மாமன் மகளே இக் கோமகன் பிரியமா விழைந்து மணந்து கொண்டான். அவள் அழகும் குணமும் அமைதியும் உடையவள். வீரலட்சுமி என்னும் பேரினள். வீரசக்கம்மாள் என்றே யாவரும் அழைத்து வருவது வழக்கம் ஆதலால் அப் பெயரே கழைத்து வந்தது. அக் குலமகளோடு அமர்ந்து இத் தலைமகன் இனிய பல போகங்களை நுகர்ந்து உரிய அரசை உவந்து பேணி அரியசீர்மைகளை அடைந்து பெரிய மகிழ்வோடு பெருகி வந்தான். பருவ உருவங்களில் சிறந்து உருகிய அன்போடு மருவி மகிழ்ந்து வந்த இக்கச் சதிபதிகளுடைய நிலைமை நீர்மைகளைத் தலைமையாக உவந்து நோக்கி உலகமக்கள் அதிசயமாய் வியந்து யாண்டும் துதிசெய்து நின்றனர்.

மன்னனே அகன் என்பார்; மங்கையே அழகி என்பார்; கன்னல்வில் ஒளித்து வந்த காமனே இவனம் என்பார்; இன்னமிர் த&னய மென்சொல் இவளிடை காணுேம் என்பார்; அன்னமென் னடைகாண் என்பார்; அம்புயத் திருவே என்பார். ஒளிதவழ் மேனி இந்த ஒண்ணகைத் திருவைக் கொள்ள அளிதவழ் கண்ணன் என்ன அருங்தவம் செய்தான்? என்பார்; களிமயில் அனேய சாயல் காமரு கன்னி முன்னம் விளிவரு தவம் செய் துள்ளாள் வேந்தனே அடைந்தாள் என்பார். மாங் தருள் மதனன் அன்ன்ை மகளிருள் இாதி யன்ன ஏங்கிழை யாளே எய்தி இன்பமீக் கூ கின்ருன் ஆந்தவம் உடையார்க் கன்றி அடைவரி கிப்பே மென்பார்; வேங்தருள் இவன்போல் மேன்மை வேறெவர் பெற்ருர்என்பார். குரிசிலைப் பெற்ருர் என்ன குலத்தவம் செய்தார் என்பார்; வரிசிலே துதலேத் தந்த மாதுமா தவமே தென்பார்; பொருசிலே மதனும் அந்தப் பொன்னுல காளும் தெய்வத் தருகிழல் அமர்வோன் தானும் சரியின்ை தனக்காம் என்பார்.