பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இறை திறம்பாமையாம். இந்த இடங்கொண்டுள்ள முறையை இடையே இகந்து நாம் யார்க்கும் இடங்கொடுக்கலாகாது. கலெக்டர் என்ருல் வரிகளைத் தொகுப்பவன் என்று பொருள்; அப்பதவியை இன்று ஏற்று வந்துள்ள அவன் என்றுமுள்ள கம் பதவியையும் அறிந்துகொள்ள வேண்டும்; அறியாது அகஞ் செருக்கி நிற்பவனிடம் அனுகா திருப்பதே நலம். அணுகினே அவமதிப்பேயாம். மரியாதை குறைய நாம் மருவ லாகாது.

அண்ணல்:-முன்னர் வந்து முடுக்குற்றுச் சென்ற ஆலன் நம்மைக் குறித்து என்னவெல்லாம் சொல்லியுள்ளானே? அம் மன்னவர் என்ன நிலையில் இவனே அனுப்பியிருக்கின்ருரோ? பொல்லாதவன், வம்பன் என நம்மை மாறுபட எண்ணி எல் லாரும் மனந்திருகி நிற்கின்ருர். இப்பொழுது போகாமல் இருக் துவிடின் மேலே கும்பினியாருக்கு வெப்பமுற எழுதிக் கப்பு நிலையை வளர்த்து இவன் தவறு மிகச் செய்வான். கோளரும் இடை புகுந்து கொடுமைகள் விளைப்பர். அப் பழி விளைவுகள் விளையாதபடி இம்முறை நாம் அளி செய்து சென்று நம் வழி முறையைக் தெளிவுறுத்தின் சிக்கை திருக்தி முக்கை நிலையை யுணர்ந்து பண்பமைந்து நின்று பழைமை பாராட்டிக் கிழமை யோடு கெழுமி வளமையாய் வரவும் கூடும்; அதுவுமன்றி அவர் உள்ள நிலையும் உளவும் உணரலாம். எல்லா நிலைகளையும் எதிர் அறிந்துகொள்ள ஏதுவா யிருக்கலால் இச்சமயம் அங்குப் போதலேகல்லது. பொறுமையாய்ப் போவதால்சிறுமைசேராது. ஊமைத்துரை:-அப்படியாயின் நான் போப் வருகிறேன். எப்படியும் சமுகம் இடம் பெயரலாகாது. நானே சென்று அவனே கேரில் கண்டு நிலைமைகளைத் தெரிந்து வருகின்றேன்.

அண்ணல்:- முன்னரே நான் வருவதாகச் சொல்லிவிட் டேன்; என்னை எதிர்நோக்கி யுள்ளவன் உன்னை நேரே கண்டால் பின்னமாய் கினைந்து பெருஞ்சினமே கொள்வன். ஆதலால் எல்லாருஞ் சேர்ந்து உல்லாசமாய்ப் போய் வருவோம்; நம் முருகேசன் அருளால் எல்லாம் நல்லதாம்; யாவும் இனிதேயாம்.