பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமேந்திரியம் செலுத்த எங்கள்

  • வேகா னந்தப் பரமன் ஞான

ரூபேந்திரன் தனக்குப் பின் வந்தோன். விண்ணவர்தம் உ.லகையாள் பிர தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்க்கிலாதான், பூபேந்திரப் பெயரேசன், பாரத நாட்டிற் கடிமை பூண்டு வாழ்வோன் வீழ்த்தல் பெறத் தருமமெலாம், மறமனைத்தும் கிளைத்துவர, மேலோர் தம்மைத் தாழ்த்த தமர் முன்னோங்க, நிலைபுரண்டு பாதகமே ததும்பி நிற்கும் பார்த்த கலிதம் சென்று மற்றொருகம் அருகில் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின் நிலையினீது காட்டி நின்றான். (பூபேந்திர விஜயம் - பாடல்கள் 1, 2 என் று அந்தக் கவிதையில் அவரை வாழ்த்தினான். -- இந்தக் கவிதையை மேலோட்டமாகப் பார்த்தால், நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் மூலம் பூபேந்திரநாதர் க லி 4 க ம் மறைந்து கிருத யுகம் தோன்றக்கூடிய ரகசந்தி நிலையைக் காட்டி நின்றார் என்றே நாம் பொருள்கொள்ளத் தோன்றும். ஆனால் பூபேந்திரர், அரவிந்தரின் தம்பி பரீந்திரர் மற்றும் அவினாஷ் பட்டாசார்யா என்ற மற்றொரு புரட்சிகரமான இளைஞர் ஆகியோரோடு சேர்ந்து , 'யுகாந்தர்' என்ற வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகைக்குப் பூபேந்திரரே ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். இந்தப் ப த் தி ரி ைக ஆயுதந்தாங்கிய புரட்சிப் போராட்டத்துக்கான அவசியத்தைப் பற்றியும், அதற்கான வழிவகைகளைப் பற்றியும், மிகவும் பகிரங்கமாகவே துணிந்து எழுதி. வந்தது. பூபேந்திரரைச் சார்ந்து நின்ற இளைஞர்கள் எல்லோரும் தம்மை 'யுகாந்தர் குழு 'வைச் சேர்ந்து புரட்சிவாதிகள் என்றே கூறிக்கொண்டனர், 'யுகாந்தர்' பத்திரிகையும் இந்தக் குழுவின். குரலாகவே ஒலித்து வந்தது. இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளுக்காகவே இந்தப் பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்