பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பாதி பற்றிய எனது ஆராய்ச்சியை நான்; இனித்தான் எழுதி "முடிக்க வேண்டும். பாரதி நினைவாக, தான் இங்கு ஆற்றவிருக்கின்ற மூன்று சொற்பொழிவுகளும், “பாரதி - காலமும் கருத்தும்' என்ற நூலில் நான் கண்டுரைத்துள்ள உண்மைகளின் அடிப்படையில், பாரதியைப் பற்றி மேலும் சில உண்மைகளை இனம் கண்டறிந்து கூறுவதையே நோக்கமாகக் கொண்டவையாகும். 1. பாரதியின் ஆறில் ஒரு பங்கும், அரசாங்கத் தடையும் 2, பாஞ்சாலி சபதம் - உறை பொருளும் மறை பொருளும் 3. பாரதியின் 'கிருத யுகம்' - ஓர் ஆராய்ச்சி என்ற மூன்று தலைப்புக்களில் நான் சொற்பொழிவாற்றவிருக்கின்றேன் என்பதைக் கூறிக்கொண்டு, முதற் சொற்பொழிவைத் தொடங்கு கிறேன்.)