பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இந்தப் பாடல்களின் மூலம் பாரதி ஏழை, அடிமை என்ற பேதங்கள் ஒழிந்து, 2ஜாதியின் பேரால் மக்களை இழிவுபடுத்தும் கொடுமை தொலைத்து, பெண்களை அடிமைப்படுத்தும் புன்மை மறைந்து, சகல மக்களும் நல்ல கல்வியறிவைப் பெற்று, தீமையற்ற தொழில் புரிந்து, சரிநிகர் சமானமாக வாழும் ஒரு சமுதாயத்தையே, அரசியல் விடுதலை, பொருள்: தார விடுதலை, சமூக விடுதலை ஆகிய வற்றுக்கு வகை செய்தும் ஒரு சமத்துவ சமுதாயத்தையே குறிக் கோளாகக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். மேலும், பூபேந்திரநாத் போன்ற புரட்சிவாதிகளான இளைஞர் களும், அ ர வி ந் த ர் முதலியோரும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின்மூலம் நாட்டு விடுதலையை விரைவில் பெற்று விடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில், 1907 ஆம் ஆண்டில் பாரதியும் ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ....... -ஆராேமே என்ன அப்போதே விடுதலை கீதம் இசைத்து விட்டான் ஒன்று முன்னர் குறிப்பிட்டோம், பொருளாதார விடுதலை, சமூக விடுதலை முதலிய பிற விடுதலை எதைப் பற்றியும் கவலைப்படாமல், அவற்றையெல்லாம்கூடப் புறக்கணித்து, அரசியல் விடுதலை ஆன்றேயே, ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுபடும் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக்கொ கண்டு, தீவிரத் தேசியவாத இயக்கத் தலைவர்கள் செயல்பட்டு வந்த காலத்தில், சொல்லப்போனால் தீவிரத் தேசியவாத இயக்கம் அதன் உச்சகட்டத்தை எட்டியிருந்த 1987 ஆம் ஆண்டில் தான் எழுதிய 'சுதந்திரப்பள்ளு' என்ற இந்தப் பாட்டிலேயே பாரதி பின்வருமாறும் 1.ாடினான். பார்ப்பானை ஐயரென் ) காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே! எங்கும் சுதந்திரம் கான்டாதே பேச்சு - நாம், எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் " - தYணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே!