பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 வதைத்தான் சோஷலிசம் என்றும் சமத்துவம் என்றும், அதுவே மனித குலத்தின் பரிணாமத்தில் அடுத்த கட்டம் என்றும், அதாவது கிருத உகத்தின் உதயமாகும் எ ள் று ம் புரிந்துகொண்டிருந்தான் சா ன் ப ன த நாம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு படிப்படியாக, 'சமத்துவம்' என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டு வந்த பாரதி, ரஷ்யாவில் நிகழ்ந்துவந்த புரட்சி களையும் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறான் என்பதும் நமக்குப் புலனாகிறது. பாரதியும் ரஷ்யப் புரட்சியும் ரஷ்ய நாட்டில் இந்த நூற்றாண்டில் பதின்மூன்று ஆண்டு களுக்குள் மூன்று புரட்சிகள் நடந்தன. முதலாவது புரட்சி 1905ஆம் ஆண்டில் வெடித்த புரட்சி. இந்தப் புரட்சியே இந்திய நாட்டில் தோன்றிய தீவிர தேசியவாத இயக்கத்துக்கும், புரட்சிச் சங்கங் களுக்கும் உத்வேகமூட்டும் சக்தியாக விளங்கியது என்று முதல் சொற்பொழிவின்போது குறிப்பிட்டேன். 1905 ஜனவரி 9ஆம் தாளன் று தமது குறைகளை எடுத்துக்கூறும் மனுவை ஜார் மன்ன கனிடம் கொடுப்பதற்காக (இன்றைய லெனின்கிராடான)' பீட்டர்ஸ் பர்க் நகரிலிருந்த மாசிக்கால் அரண்மனையின் முன்னாள் அமைதி பூர்வமாகத் திரண்டிருந்த லட்சத்துக்கும் மேற்பட்ட நிராயுதபாணி களான ரஷ்ய உழைக்கும் மக்களை, ஜார் மன்னனின் ராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆயிரம் பேருக்குமேல் கொன்று தள்ளியது. இந்த நிகழ்ச்சிதான் 1905-1987 ஆம் ஆ ண் டு க ளி ல் நடந்த முதல் ரஷ்யப் புரட்சியைத் தொடங்கி வைத்தது... இந்தப் புரட்சியிலும் லெனின் தலைமையிலிருந்த போல்ஷிவிக் கட்சி பங் கெடுத்தது. ஆனால் இந்தப் புரட்சி தோற்கடிக்கப்பட்டது. * * பின்னால் வரவிருந்த வெற்றிகரமான புரட்சிக்கு ஒத்திகை என்று லெனின் இந்தப் புரட்சியைப் பற்றிப் பின்னர் எழுதினார், இதன்பின் 1917ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிப்ரவரி மாதத் தில் ஒரு புரட்சி நிகழ்ந்தது. இதற்கும் லெனினது போல்ஷிவிக் கட்சியே தலைமை தாங்கியது. இந்தப் புரட்சி வெற்றி பெற்றது. எனினும் இந்தப் புரட்சியின்போது எழுப்பிய கோஷங்களை, புரட் சிக்குப் பின்னர் அரசாங்கத்தை ஏற்க நேர்ந்த கெரென்ஸ்கியின் கோஷ்டி - நிறைவேற்ற மறுத்தது. உலக யுத்தத்திலிருந்து ரஷ்யா விலகிக் கொள்வதும், உழுபனுக்கே நிலம் சொந்தமாவது, தொழிற் .