பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 மம் கிறது. அதற்கு ரத்தம் தான் தண்ணீர். உலக வரலாறு ரத்தத்தினால் தான் எழுதப்பட்டிருக்கிறது. நாம் உயிர்த் தியாகத்தின் மூலம் ந ££து தேசிய இயக்கத்துக்கு மகுடம் சூட்டுவோம். (மேற்கோள்: Lala Lajpat Rai - Man and his Ideas--Paruginottam Nagar P. 22 இந்த அறைகூவலின் பொருள் என்ன என்பது சொல்லாமலே விளங்கும். இதனால்தான் 1907ல் ராவல்பிண்tடி.யில் நடந்த கலகம் களைத் தொடர்ந்து, மே மாதம் 9 ஆம் தேதி, லஜபதி ரான) ய ஆங்கிலேய அரசாங்கம் நாடு கடத்திய போது, அதற்கான காரணங்களாக அது சுட்டிக் காட்டியவற்றில் லஜபதி ராயின் இந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் கூறியிருந்தது, அரவிந்தரைப் பொறுத்த வரையில், அவரே ( பாண்டிச்சேரியில் தமது சீடர்களிடம் தமது பூர்வாசிரம வாழ்க்கையைப் பற்றிக் கூறிய போது: அவர் தமது பொது நடவடிக்கையில், ஒத்துழையாமை யையும் சாத்விக எதிர்ப்பையும் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு ஒரு சாதனமாக மேற்கொண்டார். எனினும் ஒரே சாதனமாக அல்ல. அவர் வங்காளத்தில் இருந்த போது, சாத்விக எதிர்ப்பான து நோக்கத்தைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல என்று நிரூபிக்கப் படும் பட்சத்தில், பகிரங்கமான கலகத்துக்கு ஒரு தயாரிப்பாக, ரகசியப் புரட்சி நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்தார் என்று கூ.றினார். என்று தெரிய வருகிறது, {Sr! Aurobindo (On Himself and on the Mother- தொகுதி. 16. பக். 34), உண்மையில், அரவிந்தர் 1902ஆம் ஆண்டில் பரோடாவில் கல்லூரிப் பேராசிரிய ராகப் பணியாற்றி வந்த காலத்திலேயே, புரட்சித் திட்டங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். அரவிந்த ரோடு பாண்டிச்சேரியில் ஆசிரமம் வாசியாகவிருந்த தமிழ் எழுத்தாளர் ப, கோதாண்டராமன் தாம் எழுதிய அரவிந்தர் வரலாற்று நூலில், இந்தியா ஓர் உபகண்டம். அதைக் காக்க இருந்த பிரிட்டிஷ் படைகளோ மிகச் சொற்பம். ' அயலவர் ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போர் மூளுமாயின், அதில் மக்கள் எதிர்ப்பையும் எழுச்சியையும் 'பக்கபலமாகக் கொண்ட கொரில்லா யுத்தத்துக்கு வாய்ப்பிருந்தது. இத்தியாச் சேனையில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பி, ராணுவத்தை மக்கள் பக்கம் திருப்ப லாம். ஸ்ரீ அரவிந்தர் இந்தச் சாத்தியக் கூறுகளையெல்லாம் உணர்ந் திருந்தார். அவரைப் போன்று மற்றும் சிலரும் இதே கருத்துக் கொண்டிருந்தனர். சென்ற நூற்றாண்டின் இறுதி வருஷங்களில்,