பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் லகுவில் ஊகித்துக்கொள்ளலாம். எனவேதான் அவன் தனது நுாலை அரசாங்கம் தடை செய்ததை எதிர்த்து வாதாட முற்பட்ட போதும், அதனை ஒரு “ 'சமூகச் சீர்திருத்தக் கதை என்று கூறியே, வாதிட முயன்றான். இதனைப் பாரதியின் அரசியல் ராஜதந்திரம் என்றே நாம் மதிப்பிட வேண்டும், ஆயினும் நாட்டு நிலைமைகளைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலே. அரசாங்கத்தின் கழுகுக் கண்களில், பாரதி எழுதிய 'ஆறில் ஒரு பங்கு' என்ற 85லதயிர் பொதிந்திருந்த உட்பொருள், மறைபொருள் படாமல் தப்பவில்லை- அரசாங்கம் அந்நுாலில் ஆட்சேபனைக்குரியதாகக் கருதிய பகுதிகளில் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பாரதி எழுதியுள்ள பகுதிகளில், "தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சுத் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்... நாம் 4.ள்ளர் பனை யருக்குச் செய் ததையெல்லாம் நமக்கு அன்னிய நாடுகளில் பிறர்" செய்கிறார்கள்” (Enclosure to Official Memorandu!n No. 4188-) Judicial dated 8th September 1911 சென் னை ஆவணக் காப்பகம்) என்ற வரிகள் மட்டுமே ஆட்சேபணைக்குரியதாகக் குறிப்பிடப்பட்டி ருந்தது. அதே சமயத்தில், .. அதே ஆவணக் காப்பகக் குறிப்பில் பாரதி தனது நூ ஏலில், பிரம்மசாரிகளுக்கும் தேசியப் போராட்ட இயக்கத்துக்கும் உள்ள தொடர்பைக் குறித்து தனது கதாநாயகனின் வாய்மொழியாக எழுதியிருந்த பல பகுதிகளே ஆட்சேபனைக்குரிய தாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. “ஆம். பாரத தேசத்தை இப்போது பிரம்மசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய் விட்டது. இமயமலையிலிருந்த இடத்தில் முட்செடிகளும், விஷப்பூச்சிகளும் நிறைந்த ஒரு பாழும் காடு இருப்பது போல் ஆய்விட்டது', அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போல் இருக்கிறது. இதை பிரம்மசாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா சர் ஸ்வலை ராம்சர மீ முதலியார் மகனாகவேனும் பிறவாமல், நம் போன்ற சாதாரணக் குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்துகொண்டால், இந்தப் பஞ்ச, நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப் போகிறது.., தேசி கா ரி . யங்களை இவர்கள் எப்படிக் கருதுவார். கன்? பிரம்மசாசிகள் வேண்டும்;