பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்ம ஞானிகள் வேண்டும் ; தம்பொருட்டு, உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். "இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லெளகிக காரியமன்று. இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீசியும், தேஜஸ், கர்மயோகித் தன்மை முதலிய அரிய குணங்கன் வேண்டும்.” - என்ற பகுதியும் - *' தான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாக வட நாட்டில் சஞ்சாரம் செய்து வந்தேன். வந்தேமாதர தர்மத்தை மட்டும் மறக்கவில்லை. ஆனால், என்னைச் சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவில்லை. ஜனங்களுக்குள் ஒற்றமையும் பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை, காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனம் குவிய வில்லை. அங்கங்கே சில சில் பிரச்சாரங்கள் செய்ததுண்டு. இது பற்றி, சில இடங்களில் போலீசார் என்னைத் தொ...ரத் தலைப்பட்டார்கள். இதனால் நான் ஜw ங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்துகொண்டு போக முடியாதபடி, பல தடைகள் ஏற்பட்டன , ஆகவே எனது பிரசங்கங்களிலிருந்து, எனது நோக்கத்துக்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. என்ற பகுதியுமே அவையாகும். (மேற்கூறிய ஆவணக் காப் பகக் குறிப்பு) .. அரசாங்க ஆவணக் குறிப்பில் காணப்படும். இந்தப் பகுதியிலி குந்து, அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையில், உட்பொருளாக' மறைந்திருந்த குறிப்பைக் கண்டுணர்ந்துகொண்டது என்றும் அந்த நூல் தமிழ் நாட்டில் 2.ருவாகியிருந்த ரகசிய இயக்கத்தில், பிரம்மசாரிகளை மட்டுமன்றி, திரு மண மாணவர்களையும் சேரத் தூண்டும், சேர்க்கவும் தூண்டும் நூலாக விளங்கியது என்பதையும் ஓரளவு கண்டுணர்ந்துகொண்டது என்றும், அதன் காரணமாகவே அந்நூலை அன்றைய , அரசாங்கம் தடை செய்ய முற்பட்டது என்றும் நாம் முடிவு கட்டலாம், , , அவ்வாறாயின், பாரதி 'கனவு, என்ற தலைப்பில், சுயசரிதை : ",

  • வடிவில் எழுதிய கவிதை நூலையும் அன்றைய அரசாங்கம் தடை

செய்ததேன்?