பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கனவு' என்ற நூலில் காணும் குறிப்பு 'ஆறில் ஒரு பங்கு' என்ற நூலில் அரசாங்கம் ஆட்சேபணைக் குரியதாகக் கருதிய பகுதிகளில், பாரதி தன் கதாநாயகனின் வாய் மொழியாக,

  • ' நான் சுமார் 11தினாறு நீரோயம் வரை சென்னை கிறிஸ்தியன்

காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். 'வேத காலம் முதலாக இன்று வரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகளெல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர் கள். அர்ஜுனனும். காளிதாஸனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் ' பின்னும் நேற்று வரையிருந்த பாரத தேசத்தார் அனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள் என்பது முதலான ஆங்கிலேய 'சத்தியங்கள் எல்லாம் என் உள்ளத்திலே குடி புகுந்து விட்டன. ஆதல் கிறிஸ்துவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும் ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதமை என்று - ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூட பக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து என்று கூறுகின்ற பகுதியும் ஒன்றாக ஆவணக் காப்பகக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது (மேற்கூறிய ஆவணக் காப்பாகக் குறிப்பு). 'இந்தப் பகுதியில், இந்த நாட்டில் ஆங்கிலேயப் பாதிரிமார்கன் தோற்றுவித்து நடத்தி வந்த கல்லூரிகளில் அவர்கள் இந்திய நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் இழித்தும் பழித்தும் பிரசாரம் செய்து வந்ததையும், அவர்களது சமயக் கருத்தைப் புகுத்த முயன்று வந்ததையும் பாரதி குறை கூறிச் சாடியிருக்கிறான் என்பது தெளிவு. எனவே ஆங்கிலேயப் பாதிரிமார்கள் போதித்து வந்த கல்வி முறை யையும், அவர்களது போக்கையும் பாரதி குறை கூறியிரூந்ததையும், அன்றைய ஆங்கிலேயே அரசாங்கம் ஆட்சேபணைக்குரிய விஷயமாக, தடை செய்ய வேண்டிய பகுதியாகக் கருதியுள்ளது என்று நமக்குத் தெரிய வருகிறது... . .. ..' இதே போல், பாரதி தனது 'கனவு' என்ற கவிதை நூலிலும், ஆங்கிலக் கல்வி முறையையும், அக் கல்வியைப் போதித்த ஆங்கி)