பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேயப் பாதிரியார் களைப்பும் பழித்துப் பாடியிருக்கிறான் என்பதை நாம் அறிவோம். இப்போது வெளிவரும் பாரதி கவிதைத் தொகுப்புக் களில், * சுயசரிதை' என்ற பகுதியில், ஆங்கிலப் பயிற்சி என்ற துணைத்தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள 21 ஆம் பாடலிலிருந்து, 29 ஆம் பா.கல் முடியவுள்ள ஒன்பது பாடல்களே , அவன் அவ்வாறு அவற்றைப் பழித்துப் பாடியுள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில், பாரதி ஆங்கிலேயர் போதித்து வந்த கல்வியை ' 'ஊணர் கலைத் திறன் ” (பாடல் 21) என்றும், ' மண்படு (பாடல் 21) என்றும், அற்பர் கல்வி * ' {பாடல் 22) என்றும், பேடிக் கல்வி (பாடல் 28) என்றும் பழித்துக் கூறுகிறான். நரியுயிர்ச் சிறு சேவகர், தாதர்கள், நபியெனத் திரி ஒற்றர், உணவினைப் பெரிதெனக் கொடு தம்முயிர் விற்றிடும் பேடியர், பிறர்க்கு இச்சகம் பேசுவோர், கருதும் இவ் வகை மாக்கள் பயின்றிடும் , கலை பயில்கென என்னை விடுத்தனன். (பாடல் 22} என்று பாடி, ஆங்கிலேயர் கற்றுக்கொடுத்து வந்த கல்வி அடிமை களையும், சேவகர்களையும், ஒற்றர்களையும், பேடியர்களையும், இச்சகம் பேசிப் பிழைப்பாளர்களையும் உருவாக்குகின்ற கல்வியேயாகும் என்று பாரதி இடித்துக் கூறியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல், ஐயரென்றும் துரையென்றும் மற்றெனக்கு ஆங்கிலக் கலையென்று ஒன்றுணர்த்திய பொய்! பருக்கு இது கூறுவன் : கேட்பிரேல்: பொழுதெலாம் உங்கள் பாடத்தில் போக்கி நான் மெட்டி டிர்ந்து விழிகுழி வெய் திட, நவீறிழந்து எனதுள்ளம் நொய்தாகிட, ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி, என் அறிவு வாரித் துரும்பு என்ற லைந்ததால் என்றும், (பாடல் 28) செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது: தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன; நலமோ ரெட்டுணை யும் கண்டிலேன். இதை நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்" , (பாடல் 29)