பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயினும், பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு' என்ற வசன நூலில் உட்பொருளாக மறைந்திருந்த இதே கருத்து, பாரதியின் “கனவு' ' எள்ற கவிதைப்படைப்பிலும் மறைமுகமாகப் பொதிந்திருந்த உண்மை ', '. அன்றைய ஆங்கிலேய அரசாங்க அதிகான்களின் கண்களுக்குச் சரியாகச் சொன்னால், தமிழில் எழுதப்பட்டிருந்த பாரதியின் நரல்களைப் படித்துப் பார்த்து, அவற்றில் ஆட்சேபகரமான பகுதிகள் : என்பனவற்றை இனம் கண்டு, மொழிபெயர்த்துக் கொடுத்த மொழி பெயர்ப்பாளர்களின் கண்களுக்குப் புலப்படாமலே போய்விட்டது - என்றே கூறலாம். ஏனெனில் அவர்கள் “ஆட்சேபகரமானவை, என்று குறித்துக் கொடுத்த குறிப்புக்களில் மேற்கூறிய பகுதிகள் இடம் பெறவே இல்லை. மாருக . ஆங்கிலேயக் கல்வி முறையையும், அதனைப் போதித்து வந்த பாதிரிமார்களையும் குறை கூறிய பகுதிகள் மட்டுமே அவர்களுக்கு ஆட்சேபகரா மானவை'* யாகப் புலப் பட்டுள்ளன, ஆஷ் கொலை வழக்கு நடந்த காலத்தில், அந்தக் கொலை நிகழ்வதற்குத் தூண்டுகோலாக இருந்த வை' எனப்படுவலவற்றில், "கன்வு' என்ற நூலில், ஆங்கிலப் பயிற்சியைக் குறை கூறிப் பாரதி பாடியுள்ள பகுதியே, பாடல் 21 முதல் 29 வரையிலான பகுதியே சாட்சியமாகச் (ஆஷ் கொலை வழக்கு எக்ஸிபிட் (Exhibit BBBS) சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் இதனை நிரூபிக்கிறது என்று நாம் - கூறலாம், எனினும், இது ஒன்றும் விந்தையல்ல, பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு' என்ற நூலும், 'கனவு' என்ற கவிதை நூலும் ஆங்கிலேய அரசாங்கத்தினால் ஏன் தடை செய்யப்பட்டன என்பதை அறிந்து கொள்வதில், புரிந்து கொள்வதில், பாதி வரலாற்றாசிரியர்கள் வரும் கவனம் செலுத்தாது விடுத்தது தான் விந்தையிலும் விந்தையாகும்.