பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்டல சதகம் கூறினாலும், நமக்குக் கிட்டியுள்ளது எண்ணாது பாடல் களே யாகும். இதன் பின்னர் இன்றைக்குச் சுமார் ஐநா று: ஆண்டுகளுக்கு முன்னிருந்த வில்லிபுத்தூரார் பாரதத்தைத் தமிழில் விருத்தப் பாக்களால் பாடினார், வியாசீ பாரதத்தை கேட: இவர் தமது நூலாகக் கொண்டதாக இவர் குறிப்பிட்டிருந்தாலும், மேற்கூறிய பாரத வெண்பாப் பாடல்களையும், வடமொழியில் பிற்காலத்தில் அகஸ்தியபட்டர் என்பவர் இயற்றிய 'பால் பாரதம்' என்னும் பாரதச் சுருக்கத்தையும் இவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். வில்லிபுத்தூராருக்குப் பின்னர் அஷ்டா வதானம் அரங்க நாதக் கவிராயர் என்பாரும் அவருக்குப்பின் நல்லாம் பிள்ளை என்பாரும் பாரதத்தின் கதையைத் தமிழில் இயற்றியுள்ளனர், இவை தவிர, பாரதக் கதையின் பாத்திரங்களைப் பயன்படுத்தி, தமிழில், 'அல்லியரசாணி மாலை' போன்ற) பல்) அம்மvனைப் பாடல் களும் தோன்றியுள்ளன. மேலும், பாரதக் கதை தமிழ் நாட்டில் நெடுங்காலத் தொட்டு இன்று வரை தெருக்கூத்தாகவும் 'தடிக்கப், பெற்று வருவதையும் நாம் காண்கிறோம். .. - இவ்வாறு மிகவும் தொன்மையான இந்திய இதிகாசமான பாரதத்தின் கதை தமிழ் நாட்டில் பல புலவர்களாலும் பலவாறு பாடப் பெற்று வந்துள்ள ஒரு கதையாகவே விளங்குகிறது, பாரதியும் கூடத் தனது பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில், krலது சித்திரம் வியாசபா'சதக், கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நாலை வியாபாரதத்தின் மொழி பெயர்ப் பென்றே கருதி விடலாம். அதாவது “கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது சொந்தச் சரக்கு அதிகமில்லை. தமிழ் தடைக்கு மட்டுமே நான் பொறுப்பாளி என்ற தன்னடக்கத்தோடு கூறிக் கொள்கிறான், மறைவாக தமக்குள்ளே பழங்கதைகள் - சொல்வதிலோர் மகிமை இல்லை. என்றும் , இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்ஓம்' '- - - (தமிழ் பாடல் 3)