பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பாடியவன்தான் பாரதி என்பதை நாம் அறிவோம். எனினும், இவ்வாறு பாடிய பாரதி, பழைய புலவர்கள் பாடி வைத்த கதையையே தானும் திரும்பப் பாடியதால், அவனும் 'அறைத்த மாவையே அறைக்கும், காரியத்தைத்தான் செய்தானா? அல்லது அவன் தனக்கு முன்னர் அக்கதையைப் பாடிய புலவர்களிருந்து வேறுபாட்டு நின்றானா? அ வ் வ எ ஐ வி ன் அவன் அந்தக் கதையில் ஏனையோர் காணாத புதுமைகளை எவ்வாறு கண்டான்? என்ன கண்டான்? பாழமையானதோர் இதிகாசக் கதையை அவன் தேர்ந் தெடுத்தபோதும், அதில் அவன் பாரதக்கதையில் ஒரு பெரும் பகு தியத் தேர்ந்தெடுத்து, 'ஒரு பாரதக்காவியம் பாட முனையாமல், ஒரு சிறிய கதைப்பகுதியை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தான் ? அல்வாறு தேர்ந்தெடுத்த பகுதியிலும் அவன், பாஞ்சாலி சபதம் செய்யும் காட்சியோடு " ஏன் தனது கதையை முடித்துக்கொண்டு விட்டான் ? அதன் நோக்கம் என்ன ? அந்த நோக்கத்தில் ஏதேனும் உறை பொருள் உண்டா ? உறை பொருள் மீட்டுமல்லாது ஏதேனும் மறை பொருளும் உண்டா ? உண்மையில், பாஞ்சாலி சபதத்தைப் படைத்ததன் மூலம் பாரதி ஆற்றிய பணி என்ன ? இவ்வாறு அடுக்கடுக்காகப் பல கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடைகளைக் காண முயலும் ஓர் இலக்கிய விசாரனையே எனது இந்தச் சொற்பொழிவின் கருப் பொருளாகும். பாரதியும் சமூகச் சீர்திருத்தமும் எந்தsெ:ாகு கவிஞனின் படைப்யையும் நாம் ஆராயும்போது , அவன் வாழ்ந்த காலச் சூழ்நிலைமை. யும், அந்தக் காலத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டே ஆராய வேண்டும், அப்போது தான் அவன் தன் காலத்தின் குரலாக வி 6xங்கினானா, எந்த அளவுக்கு விளங்கினான், எவ்வாறு விளங்கினான் என்பதையெல்லாம் நாம் இனம்கண்டு கொள்ள முடியும். பாரதியைப் பொறுத்த வரையில் அவன் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய இந்தியத் தேசிய இயக்கம் உருவாக்கித் "தந்த தேசிய மகாகவி என்பதை நாம் அறிவோம், எனவே அவன து கவிதைப் படைப்புக் களும் அவற்றின் கருப்பொருளும் இந்திய நாட்டின் தேசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு படைக்கப்பட்டவையேயாகும். 'அவன்', "பழைய வரலாற்று நிகழ்ச்சிகளைக் கவிப், பொருளாக்கிப் - பாடுகின்ற காலத்திலும்கூட, 'அவன் அவற்றைக் கருவியாகக்