பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 43 கொண்டு, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளை எதிரொலிக்கும் எதிரொலியாகவே குரல் கொடுத்தான். உதாரணமாக, குகு கோவிந்தர், சத்ரபதி சிவாஜி ஆகியோரைப் பற்றிப் பாடிய அவன் அவர்களது வாய்மொழியாக, அன்றைய புரட்சி இயக்கத்தின் குரலை எவ்வாறு எதிரொலித்தான் என்பதை முந்திய சொற்பொழிவின் போது நாம் கண்டோம். பாரதி. திலகர், அரவிந்தர் முதலியோரைத் தலைவர் களாகக் கொண்ட தீவிரத் தேசியவாத இயக்கத்தில் ஈடுபட்டிருந்தவன் என்று சென்ற சொற்பொழிவில் குறிப்பிட்டோம். எனினும் தீவிரத் தேசியவாதத் தலைவர் களுக்கு இல்லாத ஒரு சிறப்புப் பாரதிக்கு உண்டு. இந்திய நாட்டில் . காங்கிரஸ் இயக்கம் தோன்றிய காலத் ' ' திலிருந்தே முதலில் வேண்டியது அரசியல் சீர்திருத்தமா, அல்லது சமூகச் சீர்திருத்தமா - என்ற விவாதம் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் மத்தியில் தீராத விவாதமாகவே இருந்து வந்தது எனலாம், இதில் வேடிக்கை என்னவென்றால், அரசியலில் தீவிரவாதிகளாக இருந்தவர்கள் சமூகச் சீர்திருத்த விஷயத்தில் மிதவாதிகளாகவும், அரசியலில் மிதவா திகளாக இருந்தவர்கள் சமூகச் சீர்திருத்த விஷயத்தில் தீவிரவாதிகளாகவும் இருந்தனர். உதாரணமாக, சென்ற நூற்றண்டின் இறுதிவாக்கில். அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் 'திருமண வயது மசோதா' (Age of Consent Bi11) ஒன்றைக் கொண்டுவந்தது. இது பால்ய விவாகத்தைத் தடை செய்யும் மசோதாவாகும். இதனை அரசியலில் மிதவாதியாக இருந்த தேசிய இயக்கத் தலைவரான மகாதேவ கோவிந்த நான்டே ஆதரித்தார், ஆனால் திலகரோ இதனை எதிர்த்தார். 1891ல் ஜனவரியில் இந்த மசோதா வைசிராயின் சபையில் முன்மொழியப்பட்ட பின்னரும்கூட, திலகர் தமது 'கேசரி' ப் பத்திரிகையில், இந்த மசோதா இந்துக்களின் சமூக, மற்றும் சமயப் பழக்க வழக்கங்களில் குறுக்கிடுகிறது எனக் கண்டித்துத் தலையங்கம் எழுதினார். மேலும் வைதிக இந்துக்களை அவர்கள் கடைப்பிடித்து வந்த மரபை என்றுமே கைவிட முடியாது என்று அரசுக்கு அறிவுறுத்தி எழுதுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின் 1891 ஆம் ஆண்டு மே மாதத்தில்) இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னரும்கூட, அவர் அதே மாதத்தில் புனாவில் நடந்த காங்கிரஸ் மாகாண மாநாட்டில், திருமண வயது. மசோதா விஷயத்தில் தெரிவிக்கப்பட்ட பொதுஜன அபிப்பிராயத்தை உரிய விதத்தில் அரசாங்கம் கருத்தில் கொள்ள