பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லை என்று கண்டிக்கும் ஒரு தீர்மானத்தையே முன்மொழிந்தார்! {Lokesmanya Aal: --- G.P. Pradhan and A.K. Bhagwat, p. 54} அரசியலில் தீவிரவாதிகளாக இருந்த திலகர் போன்றவர்கள் சமூகச் சீர்திருத்தல்களை எதிர்த்தது ஏன்? தீவிரத் தேசியவாத இயக்கத் தலைவர்களில் ஒருவரான அரவிந்தர், அரசியல் விடுதலை தான் ஒரு நாட்டின் உயிர் மூச்சு , எல்லாவற்றிலும் முதன்மையாக, அரசியல் விடுதலைக்குக் குறி வைக்காமல், சமூகச் சீர்திருத்தம், கல்விச் சீர்திருத்தம், தொழில் வளர்ச்சி, இனத்தின் நல்லொழுக்க அபிவிருத்தி ஆகியவற்றை அடைய முயற்சி செய்வது அறியாமையின், வீண்வேலையின் சிகாமேயாகும் என்று கூட எழுதினார். (History . of Freedom Moveme!?t in India - R.C. Mazumdar.) - - தொகுதி 1, பக். 441). சொல்லப் போனால், தீவிரத் தேசிய வசத இயக்கத் தலைவர்கள், இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேய அரசாங்கம் கொண்டு வந்த சமூகத்துக்குத் தேவையான சீர்திருத்தங் களைக்கூட, அவற்றைக் கொண்டுவருவது தம்மை ஆண்டு வந்த அன்லசிய அரசாங்கம்' என்ற காரணத்துக்காகவே எதிர்த்தனர், அதாவது சமூகச் சீர்திருத்தங்களுக்காகப் போராட முற்பட்டால், அரசியல் விடுதலைக்கான போராட்டம் பின் தங்கிவிடும் என்றும், அன்னிய அரசாங்கம் சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருமானால், அரசியல் விடுதலைப் போராட்டத்தின் கீடேர்மை முனை மழுங்கிப் போய் கிடும் என்றுமே அவர்கள் கருதினார்கள் எனலாம். இதனால் அவர்கள் அரசியல் !** தத பால் அன்று முற்போக்கானவர்களாக இருந்தபோதிலும், சமூக அநீதிகளையும் பத்தாம்பசலியாகிவிட்ட சாஸ்திர சம்மந்தங் களையும் எதிர்த்துப் போராட முனையாது, சமூகச் சீர்திருத்த விஷயத்தில் பிற்போக்கான வர்கNே 5ல் இருந்தனர். எனவேதான், ஜவஹர்லால் நேரு நீ!அது; சுவாசர்தையில், சமூக நோக்கோடு பார்த்தால், 1907ல் , 44லர்ந்த இந்தியத் தேசியம் பிற்போக்கானதே” என்று எழுதினார் {சுயசரிதை-ஜவஹர்லw ல் நேரு, அத், 4) " ஆனால், 1905ஆம் ஆண்டில் வங்கப் பிரிவினை நிகழ்ந்த . காலத்தில் தேசியக் களியாக மலர்ச்சியுற்று, தீவிரத் தேசியவாத . இயக்கத்தில் பங்கெடுக்க முற்பட்ட பாரதியோ, தேசியக் கவியாக , மலர்வதற்கும் முன்பே சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவனாக : விளங்கியவன். 1898ஆம் ஆண்டு முதல் - 1903ஆம் ஆண்டுத் - - 'தொடக்கம் வரையிலும் காசியில் வாழ்ந்து வந்த காலத்திலேயே ..