பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்: நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்' சாலவும் அரிதாவதோர் செய்தியாம் {புதுமைப் பெண் --பாடல் 5} என்று பாடி, அறிவும் வீரமும் நிறைந்த பெண்கள்தான்' ஆண்மை மிக்க மக்களையும் பெற்றெடுத்துத் தர முடியும் என்று வலியுறுத்தி யுள்ளார். மேலும், விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர் ! விடுதலை என்பீர் ! கருணை வெள்ளம் என்பீர். பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால், பின்னிந்து உலகி50சிலே வாழ்க்கை இல்லை ! - (பாரதி அறுப்பத்தாறு - பாடல் 45) என்று பாராட்டி, பெண் விடுதலை இல்லையென்றால், பிற விடுதலையும் இல்லை என அடித்துக் கூறுகிறான். அதுமட்டுமல்ல, நாட்டுக் கான விடுதலைப் போராட்டத்தில் பெண்களும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவன் கருதினான். எனவேதான் அவன் படைத்த புதுமைப் பெண், சிறுமைதீர தம் தாய்த் திரு நாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்திங்கு உழைப்போம் (பெண் விடுதலை-பாடல் 2} என்று கூறுவதாகவும் அவன் பாடிச் சென்றாள். சொல்லப்போனால், பெண் வி டு த லை பற்றிய பாரதியின் கண்ணோட்டத்தை உருவாக்கிய சக்திகளில், 13ஆம். காற்றாண்டின், கடைப் பகுதியில் பிறந்து, 1822ஆம் ஆண்டில் தனது முப்பதாவது வயது முடியுமுன்பே அற்பாயுளில் . மாண்டுபோன ஆங்கில நாட்டும் புரட்சிக் கவிஞனான ஷெல்லிக்கும் பெரும்பங்கு உண்டு எனலாம், பாரதி தேசிய கவியாக மலர்ச்சி பெறுவதற்கு முன் எட்டயபுரத்தில் இருந்த காலத்திலேயே அவனுக்கு ஷெல்லியிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அப்போது அவருக்கு ஷெல்லி, பைரன் முதலிய - ஆங்கிலக் கவிகளின் கால்களை வாசிப்பதில் பிரிகடாம் அதிகம். அந்தத்