பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் அவர் ஷெல்லிதாசன் என்னும் புனை பெயரில் பத்திரிகை களுக்குச் சில வியாசங்கள் கூட எழுதியதுண்டு என்று எழுதியுள் ளார் பாரதியின் மனைவியான செல்லம்மா பாரதி (பாரதியார் சரித் திரம்). பாரதி 'ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரில் ஆரம்ப காலத் தில் எழுதி வந்தான் என்பதற்கு, "சக்கரவர்த்தினி' - ஜூலை 1906 இதழ்). மேலும், பாரதி எட்டயபுரத்தில் இருந்த கா ல த் தி ல் 'ஷெல்லியன் சங்கம்' ' ' Shelleyan Guild) என்ற பெயரில் ஒரு சங் கத்தை ஏற்படுத்தி, அச்சங்கத்தில் உள்ளோருக்கு ஷெல்லியன் நூல்களைப் படித்துக் காண்பித்து, அனுபவிக்கும்படிச் செய்து வந்ததாகப் பாரதியின் வரலாற்றாசிரியர் ஆக்கூர் அனந்தாச்சாரி, தமது நாவில் குறிப்பிட்டுள்ளார். (கவிச் சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரித்திரம்). ஷெல்லி தான் வாழ்ந்த காலத்தில், பெண்கyைழங்கு இழைக்கப் பட்டு வந்த அநீதிகளையும், பெண்ணடிமைத்தனத்தையும் கண்டு, மனம் கொதித்துப் பல பாடல்களைப் பாடினான். பெண்ணுரிமை பம், பி ஷெல்லி பாடிய பல பாடல்களின் எதிரொலியைக் குறிப்பாக ஷல்லியின் 'ராணி மாப்' (Queen Mah) 'இஸ்லாமின் புரட்சி! (Revolt of Islaru) என்ற பெரும் படைப்புக்களில் காணப்படும் பாடல்களது கருத்துக்களின் எதிரொலியை, நாம் பெண் விடுதலை பற்றிப் பாரதி பாடியுள்ள பாடல்களில் கேட்க முடியும். உதாரண Dாக ஷெல்லியின் 'இஸ்லாமின் புரட்சி' என்ற படைப்பில் வரும் வரும் கதாநாயகியான சீத்னா என்ற பெண்ணை, 'ஆங்கிலக் கவிதை கண்ட முதல் 'புதுமைப் பெண்' எனக் கூறுவர் ஆங்கில விமர்சகர் பிளண்ட ன் என் A.சவர் {Sheiley - E. Blunden). ஷெல்லியின் புதுமைப் பெண்ணான சித்னா 'இஸ்லாமின் புரட்சியில் ஆண் பெண் சமத்து வத்தை நிலை நாட்ட வந்த வீராங்கணையாக விளங்குகிறாள். இஸ்லாம் - மின் புரட்சிக் கதையில் வரும் சொர்ணபுரிக்குள் சென்று, அங்குள்ள பெண்களின் புனர்வாழ்வுக்காக சித்னா பேசியபோது, அங்குள்ளவர் - கள் அவளை ஒரு தேவ கன்னிகையாக மதிக்கிறார்கள். இதனை அவளே. - ........... Some said . t was a child of God, sent down to save Women from bonds and deathi, (Canto 9 Poem 8) " . . . . . . . . . . .