பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55-

  • பெண்களை அடிமைத் தளையிளிருந்தும் அழிவிலிருந்தும் காப்பாற்று.

வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட கடவுளின் குழந்தை தான் என்று சிலர் சொன்னார்கள்” என்று கூறுகிருள். பராசக்தியிடம் பக்தி கொண்ட பாரதிக்கு, அவன் படைத்த புதுமைப் பெண், ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை , தல் அருளினால் ஒரு கன்னிகை யாகியே - தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள் எனப் பராசக்தியின் அவதாரமாகவே காட்சியளிக்கிறாள். ஷெல்லி பெண் விடுதலை பற்றிய பல பாடல்களுக்கும், அதனைக் குறித்துப் பாரதி பாடியுள்ள பாடல்களுக்கும் நாம் இத்தகைய பல் ஒப்புமைகளைக் காண முடியும். . . இவ்வாறு நாட்டின் விடுதலைக்காகப் பாடல்கள் பல பா டிய பாரதி பெண் விடுதலைக்காகவும் பல பாடல்களைப் பாடினான் , அ, திலும் இந்திய நாட்டின் தேசிய இயக்கப் போராட்டக் காலத்தின்போது, அன்னிய ஆதிக்கத்தின் அதிகார வர்க்கத்தாரால், பெண்கள் மான பங்கப்படுத்தப்பட்ட கொடுமையைக் கண்டு பாரதி கொதித்தெழுந் தான். அது மட்டுமல்ல. சொந்தச் சோதரிகள் போன்ற தாய் நாட்டுப் பெண்குலத்தை, அன்னிய ஆதிக்க வெறியர்களும், அவர் களது அடியாட்களும் மானபங்கப்படுத்திய காலத்திலும்,ட, அந்த இழி செயலைத் தடுத்து நிறுத்தும் ஆண்மையும் வீரமும் இன்றி, வலியிழந்து நின்ற மக்களைக் கண்டும் அவன் கோபம் கொண்டான் . மாதரைக் கற்பழித்து வண்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போல் உயிரைக் பேணி இருந்தாரடி ) (நடிப்புச் சுதேசிகள் - கண்ணி 3) என்று அவன் நடிப்புச் சுதேசிகளை இடித்துக் கூறினான். இதே போன்று கடல் கடந்து பிழைப்பின் காரண மாகப் பிற நாடுகளுக்கு, கண்காணாத சீமைகளுக்குச் சென்ற தமிழப் பெண்கள் பீஜி முதலிய தீவுகளில் பட்ட துன்பத்தையெல்லாம் கண்டும் அவள் மனம் வெதும்பினான். அவள் தனது 'கரும்புத் தோட்டத்திலே' என்று தொடங்கும் பிரசித்தமான: பாடலில், பீஜித் தீவில் வாடி வதங்கி வந்த பெண்களைப் பற்றிப் பாடும் போது,