பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாரதம் பாரதக் கதை நமக்கெல்லாம் தெரியும். அந்தக் கதையின் சாராம்சம் என்ன? பாண்டவருக்கும் துரியோ தனாதியருக்கும் தடை பெறும் குருஷேத்திரப் போரே பாரதக் கதையின் முத்தாய்ப்பான நிகழ்ச்சி. அந்த யுத்தம் ஏன் ஏற்படுகிறது? பாண்டவருக்கும் துரியோதனாதியருக்கும் இடையே நிலவிய பகைமையின் காரணமாக, பாண்டவர்தம் தேவியான பாஞ்சாலி துரியோதனனின் சபையில் மானபங்கப் படுத்தப்பட்டதன் விளைவாகவே இந்த 44த்தம் ஏற்படு கிறது. யுத்தத்தின் முடிவில் துரியோதனாதியரார் அழிந்து, பாண்டவர்கள் வெற்றி பெறுகின்றனர், அதாவது அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெறுகிறது என்பதே பாரதக் கதை. எனவே பாரதப் போருக்கே பாஞ்சாலியை மானபங்கம் செய்த செயலே, பிரதான காரணமாக விளங்குகிறது. இந்தப் பிரதான காரணமான நிகழ்ச்சியையே பாரதி தான் பாடிய பாஞ்சாலி சபதத்துக்குக் கருப்பொருளாக்கிக் (கொள்கிறாள். இந்த நிகழ்ச்சி பாரதியின் இதயத்தில் எத்தகைய ஒலியை எழுப்புகிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். - துரியோதனனோடு திரும்புத்திரன் சூதாடி, தனது செல்வங் களையும் நாட்டையும் தன் தம்பியரையும் இறுதியில் தன்னையுமே தோற்றுவிட்டான். இவ்வாறு தோல்விமேல் தோல்வி கண்ட தருமனனின் சூதாட்ட வெறி அடங்கவில்லை. அந்த வெற்றிக்குத் துரியோதனும் சகுனியும் தூபம் இடுகின்றனர். இறுதியில் வளர்ந் தோங்குகின்ற சூதாட்ட வெறிக்குத் தருமன் தன் மனைவி பாஞ்சாலி யையே பலியாக்கத் துணிந்து விடுகிறான். இதிலிருந்து விரிந்து வளரும் கதாம்சமே, பாரதியின் பாஞ்சாலி சப்தத்தின் நான்காவது அசுருக்கமாக, அவனது காவியத்தின் சிகரக் கும்பமாகக் காட்சியளிக் கிறது. பாரதியின் மணிலாக்கும் மனச்சாட்சியும் இந்த பகுதி முழு வதிலும் கணீரென்று ஒலித்தோங்குகின்றன. பாஞ்சாலியைப் பந்தயமென வ்வத்த செய்கையையே பாரதி எடுத்த எடுப்பில் .. வன்மையாக, தயாதரட்சணியம் ஏதுமின்றிக் - கண்டிக்கத் தொடங்குகிறான். ', ' .