பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்விப் பொருளினையே-புலேந ாயின்முன் மென்றிட வைப்பவர்போல், தீர்விட்டப் பொன்மாளிகை-கட்டிப் பேயினை நேர்ந்து குடியேற்றல் போல், ஆள்லிற்றுப் பொன் வாங்கியே-செய்த பூனையோர் ஆந்தைக்குப் பூட்டுதல்போல், கேள்விக்கு ஒருவரில்லை-உயிர்த்தேவியைக் கீழ்மக்கட் கா ளாக்கினான்!, {பாடல் 245) " என்று தருமனின் அடாத செய்கையை, அநீதியை அவன் கண்டிக் கிருன், அத்துடன் நில்லாது, - - செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை ! விருப்புற்ற சூதினுக்கே-ஒத்த பந்தயம் மெய்த்தவப் பாஞ்சாலியோ? (பாடல் 246) " என்று பாடி பெண்ணொருத்தியைச் சூதாட்டத்தில் பந்தயப் பொரு - எலக்கிய கொடுமையை:, அதாவது தனது பாஞ்சாலி சபதக் காவி - தத்தின் உயிர் நாடியை, பிரதானக் கருத்தைத் தொட்டுக்காட்டி விடுகிறான். வியாச பாரதத்தில் பாஞ்சாலியின் மானபங்கத்துக்குப் பின்னர் பீமனும், அர்ஜுனனும், நகுல சகதேவர்களும், பாஞ்சாலியும் சபதம் - செய்து முடித்தவுடன் ஆகாயத்திலிருந்து பூமாரி பொழிந்ததாகவும், அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு பூமியும் உயிர்ராசிகளும் நடுங்கிய தாகவும், சூரியன் இருண்டு போனதாகவும், தாவர சங்கமப் பொருள்க ளெல்லாம் கலங்கி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. வில்லி பாரதத் திலும் இவர்கள் எல்லோரும் சபதம் செய்து முடித்ததும் பல துர்ச் 1 சகுனங்கள் நே ர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் வில்லி புத்தூரார் பாஞ்சாலியைச் சபைக்குக் கொண்டு சென்ற சமயத்திலும் பல துர்ச்சகுனங்கள் நிகழ்ந்ததாகவும், மேகங்கள் ரத்தத்தைப் பொழிந்ததாகவும், பகலிலேயே நட்சத்திரங்கள் தோன்றியதாகவும், நிலம் நடுங்கியதாகவும் பாடியுள்ளார். பாரதியும், பாஞ்சாலி சபதம் செய்து முடித்ததும்,