பக்கம்:பாஞ்சாலி சபதம், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 என்று வில்லிபுத்தூராரை அடியொற்றியே பாடுகிறான். எனினும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் பாரதி, அடுத்து வரும் அடிகளில், அந்த மக்களின் கோழைத் தன்மைய்யும், அடிமைப் புத்தியையும் ஆத்திரத்தோடு தாக்கி, கவிக் கூற்றாகவே பாடுகிறான்: ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ ? வீரமில®• தாய்கள்!' விலங்காம் இளவரசன் , தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னை அவள் அந்தப் புரத்தினிலே போக்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார். பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ ? இவ்வாறு மனம் கொதித்துப் பாடி விட்டு, மேலும் கதையைக் கூறத் தொடங்குகிறான் , "பாஞ்சாலியை வீதி வழியே இழுத்து வந்தபோது, மக்கள் எவ்வாறு செயலிழந்து தின்றர்களோ, அவ்வாறு நாட்டின் அறநிலையமாகக் கருதப்படும் அரச சன்னிதானத்திலுள்ள அறிஞர் பெருமக்களும், தர்ம கர்த்தாக்களும் செயலிழந்தே நிற்கின்றனர். பாஞ்சாலிக்குத் துரியோதனனும் அவனது சகாக்களும் இழைக்கும் கொடுமையை எதிர்த்து, பாஞ்சாலியின் கணவர்களான பாண்டவர்களோ , அல்லது வேறு எவரோ தமது கண்டனக் குரலை எழுப்பவில்லை. அந்த அதீதியைத் தடுக்கக் கை நீட்டவில்லை. அது மட்டுமல்ல். அறிஞர் பெருமக்களில் ஒருவராகக் கருதப்படும் வீட்டு மாசார்யனோ, பாஞ் சாலிக்கு இழைக்கப்படும் கொடுமை சாஸ்திர சம்மதமானதே எனக் சட்டம் படிக்கத் தொடங்கித் தலை குனி: கிருன். அதாவது மனசாட்சி ஏற்றுக் கொள்ளாத ஒரு சட்டத்தை, அது மனசாட்சிக்கு விரோத மானதாக இருந்த போதிலும், அதனை முறித்தெறியச் சக்தியோ, • தெம்பேசா, திராணியோ இல்லாத் தனது ஏலாத்தனத்தை அம்பலப் படுத்திக் கொள் கிறான்: இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு - ஓப்பில்லை மாதர் ; ஒருவர் தன் தாரத்தை

  • விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்'

" " '. முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை" என்றும்,