பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 95 சு. விகர்ணன்: நூற்றுவர்களில் இவன் கடைக்குட்டி: சேற்றில் பிறந்த செந்தாமரை போல் பண்பிலும் செயலி லும் உத்தமனாகத் திகழ்கின்றான். இவனுடைய படைப்பில் வில்லிக்கும் பாரதிக்கும் அதிக வேற்றுமை இல்லை. திரெளபதியின் அவல நிலையைக் கண்டு அவையிலுள்ளோர் வாயடைத்துப் போய் வாளா இருக்கின்றனர். வீமனின் சினப் பேச்சும் அருச்சுனனின் சாந்தப் பேச்சும் முடிந்த பிறகு விகர்ணன் அரவக் கொடியோன் அண்ணனை வணங்கி நின்று இவ்வாறு பேசுகின்றான்: ‘அண்ணா, பெண்ணரசி விடுத்த வினாவிற்குப் பாட்டன் சொன்ன பேச்சதனை யான் ஒப்புக் கொள்வேன். பெண்களை விலங்குபோல் எண்ணி அவர்களை என்ன வேண்டுமானலும் செய்திடலாம் என்கின்றான் பாட்டன் பண்டைய வேதநெறி மாறிப் பின்னால் வழங்கும் நெறி இதுதான் என்கின்றான். இது தவறு; பெருந்தவறு. 'பாட்டன் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண் டாலும் எந்தையர் தம் மனைவியரை (தம் அன்னையரை) விற்பதுண்டோ? இதுகாறும் அரசமாதேவியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ? விலைமாதர்க்கு விதித்தவற்றை நீதிக்காரர் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்திப் பெருந்தவறு இழைத்து விட்டனர். இதுவும் சொல்லளவாகத்தான் இருந்தது: நடை முறைச் செயலாக என்றுமே வழக்கத்தில் இருந்ததில்லை. சூதர் வீட்டில் ஏவற் பெண்ணை பணயமாக வைக்கும் வழக்கமும் இல்லை யென்பதை அறிவோம்.' அடுத்து, இவன் அவையிலிருந்த மன்னர்களையும் பிதா மகனையும் நோக்கிப் பேசுகின்றான்: "ஐயன்மீர், தன்னைத் தருமன் இழந்து அடிமையான பின்னர் அடிமைக்கு மனைவி ஏது? வீடு இருக்கமுடியுமா? அடிமைக்கு சொத்து எப்படி இருக்கமுடியும்?' என்றல்லவா பெண்ணரசு பெண்மை