பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பாஞ்சாலி சபதம்

இந்தப் பகுதியில் அமைந்துள்ள காப்பிய நடை நிகழ்ச்சி களை யொட்டிப் புதியதொரு விறுவிறுப்பைப் பெறுகின்றது களத்தில் தோற்போர்க்கும் வெல்வோர்க்கும் இரு பக்கங். களில் நின்று பார்ப்போருக்கும் உள்ள படபடப்பும், மனத் துடிப்பும், ஏமாற்றமும் எதிர்பார்ப்பும் அற்புதமாகத் தெரி கின்றன. படபடப்பாகச் செல்லும் கவிதை நடையில் கருத் திற்கேற்ப நடை அமையும் என்பர் திறனாய்வாளர். இங்குச் சூதாடும் மனப்படபடப்பு, தோல்வி, விரைவு யாவும் நடையில் மிளிர்வதைக் காண்கின்றோம் திரெளபதியை வென்றதும் விளையாட்டரங்குகளில் வெற்றிக்குப் பின்னர் பார்வை யாளர்களிடையே எழும் உள்ளக் கிளர்ச்சியும் ஆரவாரமும் போல் கெளரவர்களிடையே எழுகின்றன. திக்குக் குலுங்கிடவே-எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல்லாம் தக்குத்தக் கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள்கொட்டு வார் ஒக்குந் தருமலுக்கே-இஃதென்பார், "ஓ! ஓ! வென் றிரைந்திடுவார்; கக்கக்கென் றேநகைப்பார்- 'துரியோதனா! கட்டிக்கொள் எம்மை’ என்பார். மாமனைத் தூக்கா யென்பார்-அந்த மாமன் மேல் மாலை பலவீக வார் சேமத் திரவியங்கன்-பல நாடுகள் சேர்ந்ததி லொன்று மில்லை; காமத் திரவிய மாம்-இந்தப் பெண்ணையும் $$)శ్రీశ மாகச் செய்தான்; ‘மாமனோர் தெய்வ மென்பார்-துரியோதனன் வாழ்க வென் றார்த்திடுவார். ஐவருக்கும் உரியதேவி நூற்றுவர்க்கும் உரியவளானாள் என்ற நினைப்பில் இங்ங்ணம் கூத்தாடுகின்றனர் போலும்!