பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பாஞ்சாலி சபதம் என்ற அடிகளில் குப்பையிலும் முத்தோ? என்ற பழமொழி திகழ்வதைக் காண்க. இங்ஙனமே, துரியோதனன் தன் தந்தை யிடம் பேசும்போது வரும், சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச் சொல்வினில் வெல்ல விரும்பிலேன்:-கடுங் கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக் காரணம் காட்டுத லாகுமோ? என்ற பகுதியில் கல்லில் நார் உரித்தல்' என்ற பழமொழி பொதிந்திருப்பதைக்காணலாம். மேலும் இவன், தந்தையிடம் உண்மை அறிவு இல்லாதவர் சாத்திரங்களைப் படித்தாலும் கேட்டாலும் அவற்றின் உள்ளுறைப் பொருளை அறியார் என்பதை எடுத்துக்காட்டும்போது, மதித மக்கென் றிலாதவர் கோடி வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும் பதியும் சாத்திரத் துள்ளுறை காணார், பானைத் தேனில் அகப்பையைப் போல்வார் என்று கூறுவதில் பானைத் தேனில் அகப்பை இருந்தாலும், அது கொள்ளுவது மிகச் சிறிய பகுதிதான் என்று மக்களிடை வழங்கும் பழமொழியைக் கண்டு மகிழலாம். திருதராட்டிரன் விதுரனைத் தூது போக்கும்போது தன் மைந்தனின் சதியால் நாட்டிற்கு ஏற்படப் போகும் அவலங்களை நினைத்துப் பேசும்போது, அன்று விதித்ததை இன்று தடுத்தல் யார்க்கெளி தென்றுமெய் சோர்ந்து விழுந்தான் என்று அவன் குறிப்பிடுவதைக் காட்டுவர் கவிஞர். இதில் 'அன்று விதித்ததை இன்று யார் தடுக்க முடியும்?? -- என்று மக்கள் பேச்சில் வரும் பழமொழி வருதல் தெளிவாகத் தெரி கின்றது. சகுனி தருமனைச் சூதுக்கு வருமாறு வல்லுக் கழைத்தபோது தருமின் பேசுகின்றான்: