பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய நடை 115 'மதியு னும்விதி தான்பெரி தன்றோ? வைய மீதுள வாகு மவற்றுள் விதியி னும்பெரி தோர்பொரு ளுண்டோ? இதில் மதியைவிட விதிதான் பெரிது’ என்று மக்கள் அடிக்கடி எடுத்துக்காட்டும் பழமொழி அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். அன்றாட வாழ்வில் மக்கள் பேச்சில் கையாளப்பெறும் உவமைகளும் காவிய நடைக்கு மெருகூட்டுகின்றன. துரியோதனன் நிலையைச் சகுனி திருதராட்டிரனுக்கு உணர்த்தும்போது, நின்மகன்...உடல் வற்றித் துரும்பொத் திருக்கின்றான்' என்கின்றான். அவன் இளைத்துத் துரும் பாகிவிட்டான்' என்ற உலக வழக்கினைச் சகுனியின் பேச்சில் காணலாம். உண்ப சுவையின்றி உண்கின்றான்:-பின் உடுப்ப திகழ உடுக்கின்றான்." என்ற அடிகளிலும் அவன் ருசியின்றிச் சாப்பிடுகின்றான் 'உடையிலும் சரியான கவனம் இல்லை என்ற உலகப் பேச்சு வழக்கினைக் காணலாம். சூரியனுக்கு முன் மின்மினி போல்’ என்ற உலகவழக்கிலுள்ள உவமை, -ஒளி ஞாயிறு நிற்பவும் மின்மினி - தன்னை நாடித் தொழுதிடும் தன்மைபோல் என்ற அடிகளில் பொதிந்து கிடக்கின்றது. -"அட! பிள்ளையை நாசம் புரியவே - ஒரு பேயென நீவந்து தோன்றினாய்; பெரு வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ?" என்ற அடிகளில் மக்கள் பேச்சு வழக்கில் உள்ள பேய்மாதிரி பெருவெள்ளத்தைப் புல் என்ன செய்ய முடியும்?' என்ப