பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H20 பாஞ்சாலி சபதம் கட்புல உருக்காட்சிகள் : பாண்டவர்கள் அத்தினபுரத் திற்கு மேற்கொண்ட பயணத்தின் நடுவில் மாலைக்காலம் வருகின்றது. மன்னனின் சேனை வழியிடையில் ஒரு பூம் பொழிலில் தங்கியிருந்தபொழுது பார்த்தன் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலை விளக்குகின்றான். செழுஞ் சோதி வனப்பையெல்லாம் சேரக் காண்பாய் என்று கூறி, கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்: கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்; கணந்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்; கருதிடவும் சொல்லிடவும் எளிதோஆங்கே கணந்தோறும் ஒருபுதிய லண்ணம் காட்டிக் காளிபரா சக்திஅவள் களிக்கும் கோலம் கணந்தோறும் அவள் பிறப்பால் என்று மேலோர் கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய். என்ற பாடலில் கட்புல உருக்காட்சிகளில் வண்ண உருக் காட்சிகள் பல இணைந்து ஓர் அற்புதக் கலவைக் காட்சி யினை நம்மனத்தகத்தில் தோற்றுவித்து நம்மைப் பூரிப் படையச் செய்கின்றன. இன்னும் இதே பகுதியில் பரிதியை, பரிதிக் கோளம்', 'மின்செய்த வட்டு, பச்சை நிறவட்டம்’, என்றும், 'இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து முடிவான வட்டத்தை" இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள் எண்ணில்லா திடையிடையே எழுதல்’ என்றும் வரும் பாடற் பகுதிகளில் பரிதியை விளக்கும் வடிவ உருக் காட்சிகளைக் கண்டு மகிழலாம். மேலும், 3. பா.ச. 1, 27:409