பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தில் உருக்காட்சிகள் #23 கூறியதைக் கேட்டதும், அவன் மீண்டும் நீதியுரைத்து வாய் மூடித் தலை குளிந்து இருக்கை கொண்டதும்', பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான் பாரதப்போர் வருமென்று தேவ ரார்த் தார் என்ற நிலைமையைக் கவிஞர் விளக்குவதில் தேவர்களின் ஆர்ப்பொலிகள் நம் காதில் விழுகின்றனவன்றோ? பஞ்சாலி தன் சபதத்தை உரைத்து முடித்ததும், ஒமென்று உரைத்தனர் தேவர்-ஒம் ஒமென்று சொல்லி உறுமிற்று வானம். பூமி அதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப் பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று" என்று கவிஞர் கூறிக் கதையை முடிக்கின்றார். இதில் தேவர் களின் 'ஓம் ஒலியும், வானத்தின் 'ஓம் ஒம் என்ற ஒலியும், பூமியின் நடுக்கமும், சுழற்காற்றின் திருவிளையாடலும் நம் காதில் விழுவதை உணர்கின்றோம். சுவைப் புல உருக்காட்சிகள் : இவ்வகை உருக்காட்சிகள் இக்காவியத்தில் அதிகமாகக் காணப் பெறவில்லை. இவற்றையும் தேடிக் காண்போம். கலைமகளைக் கற்பனைத் தேனிதழாள்’ என்று கவிஞர் உரைக்கும்போது நம் மனம் தேனின் சுவையை உணர்கின்றது. திருதராட்டிரனின் நல்லுரைகளைக் கேட்ட துரியோதன் கடுஞ்சினமுற்றுப் பேசு வான். -கெட்ட வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை மிக்க சருக்கரை பாண்டவர் 6. டிெ 5,73:308