பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 24 பாஞ்சாலி சபதம் என்றும் பேசும்போது வேம்பின் கசப்புச் சுவையும் சருக்கரை யின் தீஞ்சுவையும் நம்மனத்தில் தட்டுப்படுகின்றனவல்லவா? துரியோதனன் தன்னை இகழ்ந்து உரைக்கும்போது விதுரன் கூறும் நீதிமொழி: 'பால்போலும் தேன்போலும் இனிய சொல்லோர் இடும்பைக்கு வழிசொல்வார்; நன்மை காண்டார் இளகுமொழி கூறார்’ இக்கூற்றில் பாலின் சுவையும் தேனின் சுவையும் நம் மனத் திற்குத் தட்டுப்படுகின்றன. நாற்றப் புல உருக்காட்சிகள் : இந்த வகை உருக் காட்சிகளும் காவியத்தில் அமைந்து முருகுணர்ச்சியை நல்கு வதாயினும், இவை இக்காவியத்தில் அரிதாகவே காணப் பெறுகின்றன. இராச சூயப் பெரு வேள்வியினைத் தருமன் நடத்தியபொழுது பல நாட்டு மன்னர்களும் மக்களும் காணிக்கைப்பொருள்களைக் கொண்டு வந்து குவித்ததை துரியோதனன் எண்ணி நைகின்றதாகக் காட்டப்பெறும் கவிதைப் பகுதி இது: பொன்னிறப் பாஞ்சாலி-மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் ஏலம் கருப்பூ ரம்-நறும் இலவங்கம் பாக்குநற் சாதிவகை கோலம் பெறக்கொணர்ந்தே-அவர் கொட்டி நின்றார்கரம் கட்டிநின்றார் இப்பகுதியினை நாம் படித்துச் சுவைக்கும்போது மணப் பொருள்களின் மணம் நம் மனத்தைத் துளைப்பதை உணர் கின்றோம். நாடுறு தயிலவகை-நறு நானத்தின் பொருள்பலர் கொணர்ந்து தந்தார்