பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i25 பாஞ்சாலி சபதம் என்று பிதாமகன் நிலையையும் அவையிலிருந்த அரசர்கள் அடைந்த நிலையையும் கவிஞர் காட்டுவதில் இந்த வெப்ப உணர்ச்சியை உணர்கின்றோம். வீமனைப் பணயம் கூறுக! என்று சகுனி தருமனைக் கேட்கும்போது அவன், தக்கது செய்தல் மறந்தனன்-உளஞ் சார்ந்திடு வெஞ்சின வெள்ளத்தில்-எங்கும் அக்கரை இக்கரை காண்கிலன். என்று கூறுவதில் சின வெள்ளத்தின் வெப்பத்தை உணர முடிகின்றது. மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கி னாள்', 'எரிதழல் கொண்டு வா', சினமான தி அறிவைப் புகைத்தலாலே எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர் காமனைக் கண்ணழலாலே - சுட்டுக், காலனை வென்றவன் என்ற சந்தர்ப்பங்களுக்கேற்ற சொற்றொடர்களில் நொப்புல உருக்காட்சிகள் தென்படுகின்றன. இயக்கநிலை உருக்காட்சிகள்: இந்த வகை உருக்காட்சி களும் காவியத்திற்குப் புதுமெருகூட்டுகின்றன. அத்தின்புர வீரர்களைக் காட்டும், மாலைகள் புரண்டசை யும்- பெரு வரையெனத் திரண்டவன் தோளுடை யார் என்ற அடிகளில் புரண்டசையும் என்பதில் இயக்க நிலையை உணர்கின்றோம். சகுனியின் சூழ்ச்சித் திறத்தை மெச்சிய துரியோதனினன் மகிழ்ச்சியை, பொங்கும் உவகையின் மார்புறக்-கட்டிப் பூரித்து விம்மித் தழுவினான். என்று கவிஞர் காட்டும்போது பொங்கும், பூரித்து, விம்மி, தழுவினான் என்ற சொற்களில் இயக்க நிலைகள் தட்டுப்படு கின்றதன்றோ?