பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் உணர்த்தும் உண்மை #39 கோயிற் பூசை செய்வோர்-சிலையைக் கொண்டு விற்றல் போலும் வாயில் காத்து நிற்போன். வீட்டை வைத்தி ழத்தல் போலும் ஆயி ரங்க ளான-நீதி அவை.உ னர்ந்த தருமன் தேயம் வைத்திழந்தான்-சிச்சி சிறியர் செய்கை செய்தான்" அரசு நடத்துவோர்மீது சீறி விழுகின்றார் கவிஞர். "தென் புலம் காவல் என்முதல் பிழைத்தது’** என்ற பாண்டியனது தமிழ் மரபு கொண்டவர் பாரதியார். பாண்டி நாட்டைச் சேர்ந்தவரல்லவா? காவல்’ என்று கருதும் தமிழ்மரபு தருமற்கு இல்லாமல் நாடு தன் சொத்து எனக் கருதியதால் சினம் மூழ்கின்றது கவிஞர்க்கு. இன்று பாரதி இருந்திருப்பின் சில அரசியல் வாதிகள் நாட்டைக் குத்தகைக் கெடுத்த மாதிரி செயற்படுவதைக் கண்டு என்ன செய்திருப்பாபோர்? இதுபற்றி ஒருதனிக் காவியமே பாடியிருப்பார். அப்போதே கவிஞர் சிந்திக்கின்றார். உலக அரசியலைக் கூர்ந்து நீள் நோக்கில் காண்கின்றார்; பேசுகின்றார்: நாட்டு மாந்த ரெல்லாம்-நம்போல் நரர்க ளென்று கருதார் ஆட்டு மந்தையாமென்-றுலகை அரச ரெண்ணி விட்டார் நாட்டு ராஜ நீதி-மனிதர் நன்கு செய்ய வில்லை 12. டிெ. 3. 43; 219 13. சிலப். 2. 20: 76-77