பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாஞ்சாலி சபதம்-ஒருநோக்கு உய்த்திடு சிவஞானம் கனிந் தோர்ந்திடும் மேலவர் பலருண் டாம்; பொய்த்த விந்திரசா லம் - நிகர் பூசையும் கிரியையும் புலைநடையும் கைத்திடு பொய்மொழியும் - கொண்டு கண்மயக் காற்பிழைப் போர்பல ராம். என்று அந்நிலை அத்தினபுரத்திலிருப்பதாகக் காட்டுவர். நகரத்தை வருணிக்கும்போது நல்லவற்றையே கூறுவது கவிஞர்கள் மேற் கொண்ட மரபு. ஆனால், தீயவற்றையும் மறைக்காது காட்டுகின்றார் கவிஞர். இதுவும் பாரதியாரின் புதுமைகளில் ஒன்று. இங்ஙனம் வளநகர் காட்டப்பெறு கின்றது. விதுரன், தன் மனப் போக்குக்கு எதிராகத் தானே பாண்டவர்களை அழைக்கப் போக நேரும்போது நாட்டின் வளத்தை நோக்கியும் அஃது அண்மையில் குருதி வெள்ளம் ஓடும் அமர்க்களமாகப் போவதையும் நினைத்து வருந்தித் தனக்குள்ளே கூறி இரங்கும், 'நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு, நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு, கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழும் குளிர்காவும் சோலைகளும் குலவு நாடு, ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப் பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு பண்ணவர்போல் மக்களெலாம் பயிலும் நாடு’ "அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர அளிமுரலக் கிளிமழலை அரற்றிக் கேட்போர் கன்னங்கள அமுதுநூறக் குயில்கள் பாடும் காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்