பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு என்று ஆணையிடுகின்றான். ஐவரில் கடைக்குட்டியல்லா வா. இவன்? அதனால்தான் உரிமையுடன் ஆணையிடுகின் நான் போலும்! இதனைச் செவிமடுத்த வீரமே உருவெடுத்தவனும் கிதையின் பிறப்புக்குக் காரணமானவனுமான அருச்சுனன் இவ்வளவு கொடுமைக் கிடையிலும் தன் மன நிலையைக் காத்து வீமன் சினத்தைத் தணிவிக்கும் பாங்கில் பேசுகின் தான்: மனமாரச் சொன்னாயோ? வீமா! என்ன வார்த்தை சொன்னாய்? எங்குச் சொன்னாய் யாவர் முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் குதுக் களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீஅதிவைப் புகைத்த லாலே திரிவோக நாயகனைச் சினந்து சொன்னாய். 'தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்: தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான் கருமத்தை மேன்மேலும் காண்போம், இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம், தனுஉண்டு காண்டிவம் அதன்பேர்’ என்கின்றான். கண்ணன் அருளால் திரெளபதி மானம் காக்கப்பெறுகின்றாள். வீமன், அருச்சுனன், பாஞ்சாலி ஆகிய மூவரும் சபதம் செய்வதுடன் காப்பியம் முடிவடை 13. ஷ்ெ 5.67:282, 283