பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத்தின் ஒருமைப்பாடு 35 என்று காட்டுவர். தன் நெஞ்சிலுள்ளவற்றைச் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்டமாமனிடம் எடுத்து ரைத்து நைவதும், அவனும் அவனைச் சூழ்ந்துள்ளோரும் இப் பொறாமைத்தியை மேலும் வளர்ப்பதும் அருமையாகச் சித்தி ரிக்கப் பெறுகின்றன. சூதாட்டச் சருக்கத்தில் கதை முளை விட்டு வளரத் தொடங்குகின்றது. இச் சருக்கத்தில் சகுனி தருமனை நோக்கி, வில்லுறு போர்த்தொழி லாற் - புவி வென்றுதங் குலத்தினை மேம்படுத்தீர் வல்லுறு சூதெனும் போர் - தணில் வலிமைகள் பார்க்குதும் வருதி, என்று குதுப்போருக்கு அழைக்கின்றான். தருமன் மறுப்பதும், சகுனியின் ஏச்சும், தருமன் நீதியுடன் கூடிய மறுமொழியும், அதனால் சசுனி "வல்லமர் செய்திடவே - இந்த மன்னர்முன் னேநினை அழைத்து விட்டேன்; சொல்லுக வருவதுண் டேல் - மனத் துணிவிலை யேலதுஞ் சொல்லுக' என்று வல்லுக்கு அழைப்பதும், தருமன் இறுதியில் சூதாடு வதற்கு இணங்குவதும், சூதாட்டத்தில் தருமன் அனைத்துப் பொருள்களையும் இழத்தலும், சகுனி நாட்டை வைத்தாடு மாறு கேட்டலும், வெகுண்டெழுந்து விதுரன் ஆட்டத்தை நிறுத்துமாறு கூறும் உருக்கமான பேச்சும் போன்ற விறுவிறுப் பான நிகழ்ச்சிகளால் கதை விரைந்து வளரத் தொடங்கு கின்றது. அரிஸ்ட்டாட்டில் கூறும் தொடக்கம் இங்கு அமைந்திருத்தலைக் காணலாம். அடிமைச்சருக்கத்தில் கதை நன்கு வளர்ச்சி பெறு கின்றது. விதுரனின் உருக்கமான அறவுரைக்குத்துரியோதனன்