பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 5 காவியத்தலைவி - திரெளபதி சிலப்பதிகாரத்திற்குக் கண்ணகி காவியத் தலைவி யாக அமைவது போல், திரெளபதி இச்சிறு காவியமாகிய பாஞ்சாலி சபதத்திற்குக் காவியத் தலைவியாக அமைகின் றாள். உரைசால் பத் திணிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என்ற உண்மை சிலம்பில் அமைந்து கிடப்பதை நாம் அறிவோம். காவியத்திலேயே இளங்கோவடிகள் கண்ணகிக்குக் கோயில் எடுத்த செய்தியைக் காட்டுகின்றார். இக்காவியத்திலோ அல்லது பாரதத்திலோ திரெளபதிக்குக் கோயில் எடுத்த செய்தியைக் கவிஞர்கள் குறிப்பிடாவிடினும் நாடெங்கும் பல விடங்களில் திரெளபதி அம்மன் கோயில் என்றிருப்பதைக் காண்கின்றோம். சில இடங்களில் "தீ மிதித்தல்’ என்ற விழா வும் இத்திருக் கோயில்களில் நடைபெற்று வருவதையும் காண்கின்றோம். பாரதியார் நமக்கு இப்பத்தினித் தெய்வத்தை இவ்வாறு அறிமுகம் செய்து வைப்பர்; சூதில் இவள் பணயப் பொருளாக வைக்கப்பெறுவதைக் காட்டும்போது, பாவியர் சபைதனிலே-புகழ்ப் பாஞ்சால நாட்டின் தவப்பயனை ஆவியில் இனியவளை-உயிர்த் தணி சுமந் துலவிடு செய்யமுதை,