பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் - துரியோதனன் 53 யும் தந்தையைக் கலந்தே செய்வதாகவே வெளித்தோற்றம்! வள்ளுவர் சித்திரித்துக் காட்டும் கயமை’ எல்லாக் காலத்து மக்கள் சிலரிடமும், எல்லா நாட்டு மக்கள் சிலரிடமும் இருக்கும் பண்புதானே. இந்தக் கயமைப் பண்பு இதிகாச மாந்தர்களிடமும் இருப்பதாகக் காட்டுவர் கவிஞர்கள். எல்லா நலன்களையும் பெற்றவன்தான் துரியோதனன் எண்ணில்லாத பொருட்குவை அவனுக்கு உண்டு; யாங்கனும் செலும் சக்கர மாண்பும் அவனிடம் இருந்தது. தானை பலத் திற்கும் குறைவு இல்லை. தானும் ஆயிரம் யானை வலி கொண்டவன்தான். எனினும், அவனுடைய காய்ந்த நெஞ்சு அவனைப் பலவாறு ஆட்டி வைக்கின்றது. அவன் நெஞ்சு பொறாமை அலைகளால் எற்றுண்டு கிடப்பதைக் கவிஞர் மிக அற்புதமாகக் காட்டுகின்றார். 'பாண்டவர் முடியுயர்த்தே-இந்தப் பார்மிசை யுலவிடு நாள்வரை, நான் ஆண்டதோர் அரசாமோ?-எனது ஆண்மையும் புகழுமோர் பொருளா மோ? காண்டகு வில்லுடை யோன்-அந்தக் காளை அருச்சுனன் கண்களி லும் மாண்டகு திறல்வி மன்-தட மார்பிலும் எனதிகழ் வரைந்துள தே!" என்று துரியோதனின் பொறாமையைக் காட்டும் அழகிய சொல்லோவியம். இதனைத் தொடர்ந்து வரும் பகுதிகள் அவனது நெஞ்சக் குமுறலை நிரல் பட எடுத்தோதுகின்றன. இந்த நெஞ்சக் குமுறலைச் சொற்களால் எடுத்தோதும் பகுதி களும் மனங்கவர் முறை பில் மாண்புற அமைந்துள்ளன. இறுதியர்கச் சகுனியிடம் கூறுவான்: 5. டிெ, 1.5:20