பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாஞ்சாலி சபதம் பேச்சை வளர்த்துப் பயனொன்று மில்லை, என் மாமனே!- அவர் பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய் என்றன் மாமனே! திச்செயல் நற்செயல் ஏதெனினும் ஒன்று செய்து, தாம்-அவர் செல்வங் கவர்ந்த வரைவிட வேண்டும் தெருவினிலே." என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிடுவான், துரியோதனன் உலகியலை நன்கு அறிந்தவன். பண பலத்தால் எதையும் இந்த உலகில் சாதித்துக் கொள்ள முடியும் என்ற கொள்கையில் மிக்க உறுதியுடையவன் நெய்க் குடத்தையும் தேன் குடத்தையும் எறும்புகள் ஏறியும் சுற்றியும் திரிவனபோல, பணக்காரர்கள் அருகில் பத்துப்பேர் சுற்றித் திரிவதை நன்கு கண்டவன். பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்று வள்ளுவர் கூறுவது போல், அறிவில்லாதார், இழிகுலத் தார். இவர்களிடம் நிதிமிக்கிருந்தால் அவர்களைப் பொருட் படுத்தி எல்லாரும் கிறப்புச் செய்தலை நேரில் கண்டு அறிந்த வன். செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்’ என்ற வள்ளுவத்தின் கருத்தினை நன்கு தெளிந்தவன். தன் உள்ளக் கிடக்கையை எல்லாம் சகுனியிடம் சொல்லும்போது 6. டிெ. 16:52 7. குறள்-75! 8. டிெ- 759