பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்தலைவன் - துரியோதனன் 55 நிதிசெய் தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே! -எந்த நெறியி னாலது செய்யினும், நாயென நீள்புவி துதிசெய் தேயடி நல்குதல் கண்டனை மாமனே - வெறுஞ் சொல்லுக் கேயற நூல்கள் உரைக்கும் துணி வெலாம் ” என்று கூறுவான். இன்றைய உலகில் இதைத்தானே காண் கின்றோம்? அரசியல் வாதிகள், அரசியல் அலுவலர்கள், வணி கர்கள், தரகர்கள், பிறர் இவர்கள் யாவரும் நாடோறும் தகாத முறைகளில் பணம் பண்ணுவதையும், இதனால் விலை யேற்றம் இராக்கெட்டு ஏறுவதைப்போல் ஏறுவதையும், அப்பாவிப் பொதுமக்கள் இவர்கள் திச் செயலால் சொல் லொணா அவல முறுவதையும் நாம் அன்றாடம் காணும் காட்சிகளன்றோ? துரியோதனன் நெஞ்சுறுதி மிக்கவன். நினைத்த செயலை எவ்வாறேனும் முற்ற முடியக் கொண்டுசெலுத்தும் திறமை மிக்கவன். பேச்சிலும் சதுரன், திரிதராட்டிரன் எடுத்துக் கூறும் அறிவுரைகளுக்கும் செவி கொடுத்தான் இலன். அவை யாவும் இவனுக்குச் செவிடன் காதில் ஊதின சங்கொலிகள் போலாகின்றன. சகுனி அருகிவிருக்க முன் னிலைப் புறமொழியாகப் பேசுகின்றான்: வேம்பு நிகரிவ னுக்குநான்; சுவை மிக்க சருக்கரை பாண்டவர்: - அவர் தீம்பு செய்தாலும் புகழ்கின்றான் - திருத் தேடினும் என்னை இகழ்கின்றான் 兹交莎 政治必 褒总邻 婴·罗 沁及歌 9. டிை.1:5, 49