பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற காவிய மாந்தர்கள் 67 குன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக் குவலயத்திற் கறம்காட்டத் தோன்றினாய்' என்று தம்பிமார்களின் வாயில்வைத்துப் பேசுவர். சகுனி கூட இவனை “அறத் தோன்றல்! என்று விளிக்கின்றான். வில்லிபாரதம் நச்சுப் பொய்கைச் சருக்கத்தில் யமனே இவனது அற உணர்வைச் சோதித்து உலகிற்கு உணர்த்துகின் றான். இவனது அறஉணர்வை இவன் வாயில் வைத்தே கவிஞர் பேசுவார். சகுனி இவனைச் சூதுக்கழைத்தபோது இவன் கூறும், ஐய, செல்வம் பெருமை இவற்றின் காத லால் அரசு ஆற்றுவன் அல்லேன்: காழ்ந்த நல்லறம் ஓங்கவும் ஆங்கே ஒத லானும் உணர்த்துத லாலும் உண்மை சான்ற கலைத்தொகை யாவும் சாதலின்றி வளர்ந்திடு மாறும் சகுனி, யானரசு ஆளுதல் கண்டாய்" என்ற மறுமொழிப் பகுதியில் இவன் 'அறத்திற்கோர் உருவம் போல்வான்’ என்ற நிலையிலிருப்பதை அறியலாம். மேலும் இவன், என்னை வஞ்சித்தென் செல்வத்தைக் கொள்வோர் என்ற னக்கிடர் செய்பவ ரல்லர், முன்னை நின்றதோர் நான்மறை கொல்வார் மூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார், பின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில் பீடை செய்யும் கவியை அழைப்பார். நின்னை மிக்க பணிவொடு கேட்பேன்; நெஞ்சிற் கொள்கையை நீக்குதி.* 10. டிெ 1.25:143 11. டிெ 2,34:173 12. ශිෂු, 2.34:174