பக்கம்:பாஞ்சாலி சபதம்-ஒரு நோக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பாஞ்சாலி சபதம் என்று சகுனியை வேண்டுகின்றான். தனக்குக் கேடு இழைப் பதைப்பற்றிக் கவலை கொள்ளாதவன் உலக நியதியும் தாட்டு நீதியும் தான்மறை உண்மையும் சீரழிவதற்குக் சேலை கொள்கின்றான். நல்லரசையும் அதனை ஆள் வோரை அழிப்பதால் நாட்டிற்கேற்படும் நலிவுகளையும் காட்டும் தருமன் பேச்சில் நல்லாட்சி கொண்ட பாரதம் பிறர்க் கடிமையுற்று அடைந்த அல்லல்களை மறைமுகமாகக் கவிஞர் புலனாக்குவதைக் காணலாம். இவ்வளவு அறவுணர்வு மிக்கவன் 'கவறாடல்’ என்ற திச் செயலில் இறங்கலாமா? என்ற வினா எழுகின்றது. இருமை யும் கெடுப்பதுவாம் இந்த இழி தொழில்’ என்பதை நன் கறிந்தும் இச் சூதினை ஏற்கலாமா? தேவ லப்பெயர் மாமுனி வோனும் செய்ய கேள்வி அசிதனும் முன்னர் காவ லர்க்கு விதித்த தந்நூலிற் கவறும் நஞ்செனக் கூறினர்" என்று பேசுபவன் சிறுமை பல செய்து சீரழிக்கும் குதில்* பங்கு கொள்ளலாமா? என்றெல்லாம் கருதுகின்றோம். "வல்லுக் கழைத்திடில் மன்னர் மறுக்கக் கூடாது' என்பது ஒரு பழைய வழக்கு. இதனைச் சகுனி எடுத்துக் காட்டிச் 'சாத்திரம் பேசும்: தருமனைக் கிண்டல் செய்கின்றான். மேலும் அவன், தேர்ந்தவன் வென்றிடு வான்; . தொழில் தேர்ச்சில் லாதவன் தோற்றிடுவான்; நேர்ந்திடும் வாட்போரில் - குத்து நெறிஅறிந் தவன்வெலப் பிறனழிவான்; 13. டிெ : 2.34, 171 14. குறள் - 935