பக்கம்:பாடகி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"குடும்ப கெளரவம் முக்கியம்தான். ஆனல் நாச்சியாரினல் நம் கெளரவம் பாதிக்குமென்று நா ன் நம்பவில்லை. மயில் வாகனன் சற்று முகத்தைச் சுழித்துக் கொண்டான்.

“எதைத்தான் நான் சொல்லி நம்பப் போகிறீர்கள். ஒரு நாளாவது நீங்கள் அக்காவை கண்டித்ததுண்டா? இது போல் நான் போயிருந்தால் என்னென்ன பேசுவீர்கள்? என்ன இருந் தாலும் கூத்தாடிதானே, பாட்டுக்காரிதானே என்று பேசி யிருக்க மாட்டீர்களா?’ சாரா பொறிந்து தள்ளிள்ை. எங்கேயும் எப்போதுமே மூத்த தாரம் பேசக் கூசுவதையெல்லாம் இளைய தாரம் பேசிவிடுவது வழக்கம்தானே!

‘சாரா, நீயாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதே! குடும்ப கெளரவத்தைப் பொருத்த வரையில் அவளாக இருந் தாலும் சரி, நீயாக இருந்தாலும் சரி, இரண்டு பேருமே எனக்கு ஒன்றுதான்! நீ உன் மனத்தில் வேற்றுமையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன். அவளைக் கண்டிக்கும் நேரம் வரும்; அப்போது நிச்சயம் கண்டிப்பேன்’ என்று ஆறுதல் சொன்னன் மயில்வாகனன்.

சாரா கூறியவையெல்லாம் மயில்வாகனனுக்கு உறுத்த லாகத்தான் இருந்தன. அவனுடைய இரண்டு மனங்களும் அவளுேடு பேசின.

“என்ன இருந்தாலும் ஒரு பெரிய இடத்துப் பெண் அடிக் கடி இன்னொருவர் வீட்டிற்குப் போவது நல்லதல்ல. பெண் மனம் எப்போதும் கடல் மாதிரி. பொங்கி எழுந்தால் ஊரே தாங்காது” என்றது ஒரு மனம்.

‘தவறு; நாச்சியார் வந்தது சிகிச்சைக்குத் தானே. அவளுக்கு எங்கெங்கு நாட்டம் போகிறதோ அங்கெல்லாம் போக விடுவதும் ஒரு சிகிச்சைதான். அவளைக் கண்டித்துத்

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/100&oldid=698889" இலிருந்து மீள்விக்கப்பட்டது