பக்கம்:பாடகி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகலாம்; நாம் இரண்டு பேரும்தான் போகமுடியும்!” என்று விடுகதை போடுவது போல் பேசினுள் சாரா.

“ஏன் நாச்சியார் வரமாட்டாளா? நான் கூப்பிட்டால் கூடவா வரமாட்டாள்!” எரிச்சலோடு கேட்டான் மயில் வாகனன்.

“அது வேறு விஷயம் அத்தான். அக்காள் வீட்டில் இருந் தால்தானே நீங்கள் கூப்பிடுவீர்கள். அவர்கள்தான் எந்த நேரமும் லேடி டாக்டரோடு நகர் வலம் போய் விடுகிறார்களே! நீங்கள் ஒரு வாரமாக ஊரில் இல்லை. இந்த ஒரு வார காலத்தில் ஒரு நாளாவது மாலை நேரத்தில் வீட்டில் இருந்தார்களா என்று கேட்டுப் பாருங்கள்’ சாம் பி ரா னி போடத் தொடங்கி விட்டாள் சாரா.

இருவரும் நெருங்கிப் பழகிவிட்டார்கள் அதனல் டாக்டர் அவளை விட்டுப் பிரிய மாட்டேன் என்கிறார்கள். சாரா, உனக் கொன்றைச் சொல்லி வைக்கிறேன். மற்ற பெண்கள் மாதிரி நாச்சியாருக்கு ஆடம்பரம், அலங்காரம் எல்லாம் அறவே பிடிக்காது. மிகவும் அடக்கமான சுபாவம் அவளுக்கு மயில் வாகனன் மிகுந்த பெருமிதத்தோடு சொன்னன்.

“ஐயோ அத்தான் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது அக்கா வெளியில் போகும் போது நீங்கள் பார்த்ததில்லை, புடவைக்குத் தகுந்த கம்மல், கைக்கடிகாரம், ஒரு கை நிறைய வளையல்கள்-இதெல்லாம் என்ன அடக்கமான சுபாவமா? ஒரு நடிகை கூட இப்படி அலங்கரித்துக் கொள்ள மாட்டாள்ே!” சாரா விடவில்லை.

சாரா, நாச்சியாரை அப்படி யெல்லாம் சொல்லாதே! ஆவள், அவளையே தியாகம் செய்து கொண்டவள். அவளுடைய தியாகத்தால், நீ தான் பலன் கண் ட வ ள். நீயே அப்படிப் பேசலாமா?

அதற்காக குடும்பப் பெருமையை இழந்து விடுவதா? நாலு பேர் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்!’

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/99&oldid=699039" இலிருந்து மீள்விக்கப்பட்டது