பக்கம்:பாடகி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தால் மீண்டும் மூளையில் இரத்தம் உறைந்து கொண்டா லும் ஆச்சரியமில்லை,” என்றது அடுத்த மனம். எப்பேர்ப்பட்ட அறிவாளியின் உள்ளத்தில் மனப்போராட்டம் ஏற்பட்டாலும் கோபம் வெல்லுமா குணம் வெல்லுமா என்று கண்டு பிடித்து விடுவது சுலபம். ஏனெனில் கோபம் வந்த பிறகுதானே அவ னுக்குமணப் போராட்டமே வ லுக்கிறது. இதில் செல்லப் பிள்ளையாக வளர்ந்த மயில்வாகனனின் மனப்போரிலே மட்டும் எப்படிக் குணம் வெல்லும் என்ன இருந்தாலும் ஒரு சுமங்கலி, அடிக்கடி புருஷனுடைய அனுமதியின்றி இன்னொரு பங்களா வுக்குள் போய் வருவது நியாயமல்லதான்; அது கண்டிக்கப்பட வேண்டியதுதான், என்று யோசித்த மயில்வாகனன் நேராக கோகிலாவின் வீட்டுக்குப் புறப்பட்டான்.

மாலை மயங்கிடும் நேரம். கோகிலாவும், நாச்சியாரும் கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மயில்வாகனன் வருகை வியப்பைக் கொடுத்தது.

‘இன்று நல்ல அறிகுறி அத்தான், இன்று உங்களுக்காக அர்ச்சனை செய்யத்தான் புறப்பட்டோம். புனர்பூசநட்சத்திரம் தான் நீங்கள் பிறந்தது என்று நான் சொல்லி முடிப்பதற்கும் நீங்கள் வருவதற்கும் சரியாக இருந்தது நீங்களும் எங்களோடு வந்தால் மிகவும் சிறப்பாகஇருக்கும்’ என்று உற்சாகம்'பொங்க பேசினுள் நாச்சியார். எதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை. செடியின் வேர்கள் நன்றாக இருந்தால்தான் மலர்களே பூக் கின்றன. அது போலவே தான் மனிதனின் மனம் நிதானமாக இருந்தால்தான் காதுகள்கேட்கின்றன. கண்கள் பார்க்கின்றன மனம் கெட்டிருந்தால் மின்சாரம் இல்லாத இயந்திரம் போல் அவயங்கள் செயலற்று விடுகின்றன. மெளனமாக இருந்த மயில்வாகனன டாக்டர் கோகிலாவின் குரல் உசுப்பியது.

வணக்கம், மயில்வாகனன் சார் என்றும் இல்லாமல் முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். காபி கொண்டு வந்திருக்கிறேன். ஒரு நிமிஷம் நீங்கள் தாமதமாயிருந்தால் எங்களைச் சந்தித் திருக்க முடியாது. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/101&oldid=698890" இலிருந்து மீள்விக்கப்பட்டது