பக்கம்:பாடகி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறேன். உங்கள் இருவரையும் மீண்டும் பேசவைத்த பெருமை, பழக வைத்த அருமை எல்லாமே எனக்குத் தானே சேரும். இல்லையா? - டாக்டர் கோகிலா மட மட வென்று பேசிக் கொண்டே போளுள், மயில்வாகனன் மெய் மறந்த நிலையில் சிலை போல உட்கார்ந்திருந்தான்.

“மிஸ்டர் மயில்வாகனன் இதோ ஆல்பம், இதில்தான் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இருக்கிறார் கள்’ என்று ஆல்பத்தை மயில்வாகனனிடம் கொடுத்தாள்.

மயில்வாகனன் வேண்டாவெறுப்பாக ஆல்பத்தைப்புரட்டி ன்ை. முதல் பக்கத்தில் டாக்டரின் பெற்றாேர்களின் படம் இருந்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டினன். அவ்வளவுதான். அவன் தலையில் இடி விழுந்து விட்டது போல் உணர்ந்தான். அவன் பார்த்த அடுத்த படம் கருணையானந்தத்தின் படம்.

“இவர் என் அண்ணன்! டேவிட் கருணையானந்தம். இப் போது பாதிரியாக இருக்கிரு.ர்.’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னுள் டாக்டர் கோகிலா. --

மயில்வாகனன் நிமிர்ந்து டாக்டரைப் பார்த்தான்.

‘இப்போதுதான் டாக்டர் எனக்கு எல்லாமே புரிகிறது. இதெல்லாம் உங்கள் ஏற்பாடுதான?...... நாச்சியாரம்மா உன்னுடைய வேஷம் இன்று குலைந்து விட்டது. விட்ட குறை யைப் பூர்த்தி செய்யவும்; தொட்ட குறையைத் தொடர்ந்து புரியவும்தான் இங்கே வருகிருயா? சாரா சொன்னதுதான் சரியாகப் போய்விட்டது......... 33

‘என்ன மிஸ்டர் மயில்வாகனன் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது என்ன நடந்து விட்டது? கோகிலா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“எது நடந்து விடும் என்று பயந்தேனே அது நடந்து விட்டது. எது நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே வந்தேனே அதுதான் டாக்டர் நடந்துவிட்டது.”

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/102&oldid=698891" இலிருந்து மீள்விக்கப்பட்டது