பக்கம்:பாடகி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மிஸ்டர் மயில்வாகனன் நீங்கள் நினைக்கிற மாதிரி எங்கள் குடும்பம் மோசமான குடும்பம் அல்ல. பெரிய குடும்பம். நான் உங்களுக்குச் செய்தஉதவிக்கு நீங்கள் செய்யும் கைமாரு இது? கோகிலா கொதித்துப்போய் பேசிள்ை.

“டாக்டர், இதற்குமேல் நான் உங்களிடம் எதையும் பேச விரும்பவில்லை. நீங்கள் மட்டும் என்னிடத்தில் ஆல்பத்தைக் கொடுக்காமல் இருந்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது’ என்று சினந்து பேசினன் மயில்வாகனன்.

‘என்ன மிஸ்டர் புதிதாக ஏதோ புதிர் போடுகிறீர்கள்? ஆல்பம் எங்களுடையது. அதில் என் பெற்றாேர்கள், அண்ணன் இவர்கள் தானே இருக்கிறார்கள்” என்று வியப்போடு கேட்டாள் டாக்டர் கோகிலா.

‘உண்மைதான். யார் தெரியுமா அந்தப் பாதிரியார்.

“அது தா ன் திரும்பத் திரும்பச் சொல்கிறேனே என் அண்ணன் என்று’ -டாக்டர் கோகிலா உரக்கப் பேசிள்ை.

“உங்களுக்கு அண்ணகை இருக்கலாம்; இவளுக்கு ஒன்றும் தெரியாத மாதிரிப் பேசுகிறீர்களே டாக்டர். எல்லாமே உங்கள் ஏற்பாடுதான் போலிருக்கிறது’. மயில்வாகனன் எடுத்தெரிந்து பேசினன்

‘மயில்வாகனன், நிதானமாகப் பேசுங்கள். உங்களுக்கும் நாச்சியாருக்கும் ஆ யி ர ம் இருக்கலாம். அதற்கு நான பொறுப்பு?

‘நீங்கள் பொறுப்பல்ல; இந்த ஆல்பம் பொறுப்பு. ஆனல் எதுவும் உங்களுக்குத் தெரியாமல் நடக்கிறது என்று நம்ப நான் தயாராக இல்லை. நீங்கள் போட்ட மையில் தான் அவள் ஆடு கிருள்; மறைக்க வேண்டாம், டாக்டரம்மா!’

‘வார்த்தைகளைக் கொட்டி விட்டால், பிறகு அவற்றை அள்ளிக் கொள்ள முடியாது. எதையும் யோசித்துப் பேசுங்கள்” டாக்டர் இரைந்தாள்.

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/103&oldid=698892" இலிருந்து மீள்விக்கப்பட்டது