பக்கம்:பாடகி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தை விட, இராமாயணத்தை எல்லா இனத்தவரும் அதிகம் மதிப்பதற்கு சீதை தான் காரணம்; இன்னும் பெருமை இராமன் யாராக இருந்தாலும், இராவணன் யாராக இருந் தாலும் சீதையின் படைப்பு ம ட் டு ம் தென்னிந்தியச் சாயல் கொண்டதாக இருப்பதால் தான் என்று எப்போதோ ஒரு சொற்பொழிவில் கேட்டது அன்று காசிநாத்தின் நெஞ்சுக்குள் திரும்ப நுழைந்தது.

இராமாயணம் ஒரு ராஜ கு டு ம் பத் தி ன் துக்கமான சோதனைகள் நிறைந்த சரித்திரம். ஆனல் பாரதம் அப்படிப் பட்டதல்ல. பாரதத்திற்கு கதாநாயகனே நாயகியோ இல்லே. அது அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்த ஆட்சிப் பிரியர்களின் கதை. இந்த இரண்டு இதிகாசங்களிலும் இராமாயணமே அதிகமாக மதிக்கப்படுகிறது எ ன் ப த ற் கு ஊரெல்லாம், வீடெல்லாம் பெண்களுக்கு ஜா ன கி, சீதை, வைதேகி என்று பெயர்கள் சூட்டியிருப்பதே போதுமான ஆதாரங்களாகும், காசிநாத்தின் செவிகளில் எப்போதோ கேட்ட இந்த உபன்யாசங்கள் ஊரத் தொடங்கின. கா சி ந த் பெருமூச்சு விட்டார். நான் என் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறியிருந்தாலும், அவள் ஒரு பெண்ணுக்குரிய இலக்கணத்திலிருந்து தவறவில்லை. ‘என்ன தான் பெண்கள் நிராயுத பாணிகளாக இருந்தாலும், அவர்கள் கற்பைக் காக்கும் போரில் ராணுவத் தளபதிகளுக்குச் சமமான பலமுள்ளவர்களாகி விடுகிருiர்கள்” என்று மனத்துக் குள்ளேயே சொல்லிக் கொண்டார் மேஜர்.

அப்போதுதான் தபால்காரன் வீட்டுக்குள் நுழைந்து ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனன். மேஜர் மிகுந்த உற். சாகத்தோடு கடிதத்தை உடைத்தார். கடிதம் மிகவும் சுருக்க மாக இருந்தது. ஆல்ை, கடிதத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஈட்டி முனைகளாக இருந்தன.

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/105&oldid=698894" இலிருந்து மீள்விக்கப்பட்டது