பக்கம்:பாடகி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள மாமாவுக்கு,

வணக்கம். நான் நாச்சியாரை விவாகரத்து செய்வதென்று திர்மானித்து விட்டேன். ந ன் ரு க யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

இப்படிக்கு மயில்வாகனன்.

காசிநாத்திற்கு நெஞ்சம் தணலானது. போர்க்களத்து அதிர் வேட்டுகள் அவர் நெஞ்சில் வெடித்துக் குமுறின. விருப்ப மில்லாமல் செய்து வைத்த திருமணம் விபத்தில் முடிந்து விட்டதோ? என்று மேஜர் புலம்பினுi.

அந்த நேரத்தில் யாரோ கதவைத் தட்டினர்கள். மேஜர் கதவைத் திறந்தார். ஒரு பாதிரி வாசலில் நின்றாம்.

“வணக்கம்!”

“யார் நீங்கள்?’

‘என் உடையைப் பார்த்தாலே தெரியவில்லையா? நான் ஒரு பாதிரியார் என் பெயர் டேவிட் கருஃணயானந்தம்.”

தெரிகிறது! திடீரென்று வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே என்று கேட்டேன்.’

‘நான் எப்போதும் பிறருக்கு உதவுகிறவன் தான். இன்று காலே நான் கோகலே ஹாலில் நடந்த பாதிரிமார் கூட்டத் திற்குச் சென்றேன். நான் சென்ற வாடகைக் காரில் இந்தக் கைப்பை இருந்தது; அதில் இந்த வீட்டு விலாசமும் இருந்தது. அதைத் தான் தங்களிடம் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றார் டேவிட் கருணையானந்தம், பிறகு தான், அவர் பையைத் தவற விட்ட செய்தியே அவருக்குத் தெரிய வந்தது.

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/106&oldid=698895" இலிருந்து மீள்விக்கப்பட்டது